வணக்கம் தமிழா!

என் வலைப்பூவிற்க்கு வந்தமைக்கு முதற்கண் நன்றி…
ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு பிறகு நான் தமிழில் முனைப்போடு எழுதுகிறேன்…
கடைசியாக கல்லூரியில் படிக்கும்போது எழுதியது
என்னை திரும்ப தமிழில் எழுத தூண்டியது இருவரின் எழுத்துக்கள்…
இவர் முதலில் எனக்கு ட்விட்டர் முலமாக பழக்கம். ட்விட்டரில் தொடர்ந்து தமிழில் எழுதி என்னை வியப்பில் ஆழ்த்தியவர்.
அது வரை வலையில் தமிழை சிறு சிறு கமெண்டுகள் மூலம் பார்த்த எனக்கு இவரின் ட்விட்கள் வியப்பில் ஆழ்த்தின.
வலையில் தமிழ் மொழி பயன்பாடுகள் எல்லை மீது எனக்கு இருந்த மாயையை தகர்த்து எறிந்த்தில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. இத்தனைக்கும் நான் ஒரு மென்பொருள் நிபுணர்..ஆனால் வலையில் தமிழ் மொழி பயன்பாட்டின் முன்னேற்றத்தை நான் கவனிக்கவே இல்லை..வெட்க்ககேடு
இவர்தான் எனக்கு வலையில் தமிழில் எழுத NHM Writer ஐ பரிந்துரைத்தவர்.
பிரகாஷ் முலமாக என்.சொக்கன் எனக்கு அறிமுகம். இவரை எழுத்தாளாராக நான் கேள்வி பட்டிருந்த்தாலும்(என் மனைவி சித்ரா முலமாக), இவர் படைப்புகளை இப்பொழுதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
இவரின் எளிமையாக பழகும் தன்மை ஆச்சிரியமான ஒன்று…ஏதோ பல வருடங்கள் பழகியது போல நம்மை ஒரு comfort zoneக்கு வைத்து விடுவார்
இவரின் வலைப்பூ இடுகைகள் தான் இந்த வலைப்பூவை ஆரம்பித்தர்கான இன்ஸ்பிரேஷன்..
ஊஸ்…இந்த இடுகையை தமிழே ’தயவு செய்து முடித்து தொலை’ என்று எச்சரிக்கும் அளவுக்கு 4 மணி நேரம் தமிழை டார்ச்சர் செய்து முடித்துருக்கிறேன்
ஏகபட்ட அடித்தல் திருத்தல்.. போக போக சரியாகிவிடும் என்று நம்புகிறேன்
தொடர்ந்து பேசுவோம்…


Nanba, Welcome to Tamil blog
@RaviSuga (twitter)
நன்றி நண்பரே!!
வாழ்த்துகள், தொடர்ந்து எழுதுங்கள் தமிழில்
உங்களை பாதித்தவை, கண்ணோட்டங்கள், நிகழ்வுகள் ஆகியவை பற்றி பேச்சு வழக்கில் சுவாரசியமாக எழுத முயற்சிக்கவும்.
செந்தமிழும் கைப்பழக்கம் தான்
எ.அ.பாலா
உண்மைதான்…
நன்றி பாலா!!
கண்டிப்பாக எழுதுகிறன்
வாழ்த்துகள் நண்பரே!
இதைத்தான் எழுதவேண்டும் என்றெல்லாம் வரையறை வைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து எழுதிவாருங்கள், அப்புறம் கை தானாக எழுத ஆரம்பித்துவிடும்
- என். சொக்கன்,
பெங்களூர்.
நன்றி நண்பரே..சீனியர் பாலாவும் இதைதான் கூறினார்…
கண்டிப்பாக எழுதிகிறேன்
வாழ்த்துகள் நண்பரே!
இதைத்தான் எழுதவேண்டும் என்றெல்லாம் வரையறை வைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து எழுதிவாருங்கள், அப்புறம் கை தானாக எழுத ஆரம்பித்துவிடும்
- என். சொக்கன்,
பெங்களூர்.
நண்பனே, உன் முயற்சியை மனமார பாராட்டுகின்றேன். குறிப்பாக உன் தமிழ் ஆர்வத்தை…உன் எழுத்து தொடர மற்றும் மிளிர என் உளம்கனிந்த வாழ்த்துக்கள்..!!!!
பிரியங்களுடன்,
ரோனல்ட்
நன்றி ரோனல்ட்
என் முதல் இடுகைக்கு மறுமொழி மூலம் உற்சாகபடுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி