search
top

ஏன் இப்படி – செய்கூலி சேதாரம்

நடைமுறை வாழ்க்கையில் சில விஷயங்களை பார்த்து ஏன் இப்படி என்று எனக்கு நானே வினவியது உண்டு

அவற்றை பற்றி என் நண்பர்களிடம் விவாதித்து இன்னும் தெளிவடையாத விஷயங்கள் நிறைய உண்டு.

அவைகளை இங்கே முன்வைக்கிறேன்.. உங்கள் மூலமாக எதாவது மணி அடிக்கிறதா என்று பார்க்க :)

செய்கூலி சேதாரம்

செய்கூலி சேதாரம்

இந்த செய்கூலி சேதாரம் கான்செப்டே புரியல..

பொதுவா ஒரு பொருளுக்கு விலை வைத்து விற்பதுதான் நடைமுறை..

ஆனால் தங்க நகை வாங்கும்போது மட்டும் ஏன் அதை செய்த்தற்கான கூலியையும், செய்யும்போது ஏற்படும் சேதாரத்தையும் வாங்குபவர் தலையில் கட்டுகிறார்கள்?

செய்கூலியாவது பரவாயில்லை..அதன் வேலைபாட்டுக்காவது தண்டம் அழுகலாம்…

ஆனால் சேதாரம்…சேதாரமான தங்கத்தையும் நம்மிடம் கொடுப்பது இல்லை..ஆனால் காசை மட்டும் வசூலிக்கிறார்கள்…என்ன கொடுமை சார் இது :(

இது போக..வாங்கின கடையிலேயே முன்பு வாங்கின நகையை எக்சேன்ஞ் செய்ய கொடுத்தால் அதற்க்கும் சேதாரத்தை கழித்து விட்டு கொடுக்கிறார்கள்??!!

நமக்கு கிடைக்காத சேதாரத்திற்கு இரு முறை செலவு ??!!

ஏன் இப்படி :?:

தொடர்ந்து பேசுவோம்…

சுவாசிகா

No Responses to “ஏன் இப்படி – செய்கூலி சேதாரம்”

  1. kainoorsathyan says:

    இன்றும் கொடுமை என்னவென்றால், எந்த
    அடிப்படை நியாயமும் இல்லாத இந்த, செய்கூலி சேதாரம் எனும் சமாச்சாரத்திற்கு , விற்பனையாளர், மேலாளர், உரிமையாளர் என்று அனைவரிடமும் இளிக்கத் தயாராக இருக்கிறோம்! சில நூறுகள் தள்ளப்பட்டால், சில் ஆயிரங்களை மகிழ்ச்ச்யோடு கொடுத்துவிட்டு வருகிறோம்!

    ஏன்? தங்கம் என்பது பயன்பாட்டுப் பொருள் அல்ல, “என்னிடம் இருக்கிறது பார்… உன்னிடம் இருக்கிறதா? என்று பகட்டிக் கொள்ள உதவும் ஊடகம் என்பதாலா?

    அது மட்டுமல்ல, அடுத்த சில நிமிடங்களிலேயெ, ஆட்டோக்காரர் ஒரு பத்து ரூபாய் அதிகமாகக் கேட்டால், அவரை மறுக்கிறோம்.

  2. MSK says:

    Could you please give ur mail id. I’ll explain about this ‘Gold Sales concept’ clearly. You are totally wrong in your way of thinking about this.

    Yours,
    MSK
    mskumar86@myway.com

  3. MSK says:

    //உங்கள் மூலமாக எதாவது மணி அடிக்கிறதா என்று பார்க்க :) //
    நான் அடித்த மணியை இன்னும் பதிவேற்றாமல் இருக்க என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா ??

  4. MSK says:

    //அவரின் விளக்கத்தை இந்த வாரம் தனி இடுகையாக போட வேண்டும்.//
    //கண்டிப்பாக அதை வெளியிடுவேன்..கவலையும் சந்தேகமும் வேண்டாம்//
    நன்று !!!
    //என் சந்தேகத்தை தீர்க்க முனையும் அவரின் நோக்கத்தை பாராட்டுகிறேன்.//
    பாராட்டெல்லாம் வேண்டாம் நண்பா. நீங்கள் உங்கள் சந்தேகத்தை பலரின் பார்வைக்கு கொண்டு வந்ததனால், அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இருப்பதாக உணர்ந்தேன். உண்மை நடப்பை சொன்னேன். நீங்கள் அதை வெளியிட்டு உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்தினால் அதுவே போதும்.
    //உங்கள் பதிலில் என் சில சந்தேகங்கள் தீரிந்தது & புது கேள்விகளும் பிறந்திருக்கிறது. //
    கேள்விகள் பிறந்தால் பதில்களும் பிறக்கும். என்னிடமிருந்து மட்டும் அல்ல, யாரோ ஒருவரிடம் இருந்தும் கூட !!!

    அன்புள்ள
    MSK

    • சுவாசிகா says:

      //இன்றும் கொடுமை என்னவென்றால், எந்த
      அடிப்படை நியாயமும் இல்லாத இந்த, செய்கூலி சேதாரம் எனும் சமாச்சாரத்திற்கு , விற்பனையாளர், மேலாளர், உரிமையாளர் என்று அனைவரிடமும் இளிக்கத் தயாராக இருக்கிறோம்!//

      உண்மைதான்…

      //ஏன்? தங்கம் என்பது பயன்பாட்டுப் பொருள் அல்ல, “என்னிடம் இருக்கிறது பார்… உன்னிடம் இருக்கிறதா? என்று பகட்டிக் கொள்ள உதவும் ஊடகம் என்பதாலா?//

      பெரும்பான்மையானோர் நீங்கள் சொல்வது போல்தான் பகட்டுக்காகத்தான் வாங்க்குகிறார்கள்

      ஆனால் என்னை போன்ற சிலர் தங்க காசை investments ஆக வாங்குகிறோம். தங்க காசுக்கும் செய்கூலி, சேதாரம்னா எப்படி…

      பூனைக்கு மணி கட்டுவது யார்??

      சுவாசிகா

  5. சுவாசிகா says:

    Hi Kumar:

    First of all, thanks for contributing your time to clarify my doubt.

    My email id is ksawme@gmail.com

    I will wait for your email…

    சுவாசிகா

  6. சுவாசிகா says:

    Thanks for the followup MSK…

    பணி காரணமாக இன்னும் draftல் இருக்கும் உங்கள் responseஇ இன்னும் போடவில்லை.. I planned for publishing it this weekend where I got good quality time.

    But I already announced to my friend network in Twitter on Sep 15th that I planning to publish a reply. Here are my tweets for your reference

    >>>
    எனது ”ஏன் இப்படி – செய்கூலி சேதாரம்” http://bit.ly/i0NHJ இடுகைக்கு காரசாரமாக அன்பர் ஒருவர் என் பார்வை தவறு என்று மெயில் அனுப்பியுள்ளார்..

    எனது பார்வை தவறு என்றும் இவை எப்படி calculate செய்ய படுகிறது என்றும் விளக்கமாக pdfல் அனுப்பியிருக்கிறார்.

    அவரின் விளக்கத்தை இந்த வாரம் தனி இடுகையாக போட வேண்டும். இதற்காக நேரம் செலவழித்த நண்பருக்கு நன்றி :)

    என் சந்தேகத்தை தீர்க்க முனையும் அவரின் நோக்கத்தை பாராட்டுகிறேன்.

    >>>

    கண்டிப்பாக அதை வெளியிடுவேன்..கவலையும் சந்தேகமும் வேண்டாம் நண்பா…

    உங்கள் பதிலில் என் சில சந்தேகங்கள் தீரிந்தது & புது கேள்விகளும் பிறந்திருக்கிறது.

    Thanks once again for your time..

    அன்புடன்
    சுவாசிகா

Leave a Reply

top