search
top

எனக்கு பிடித்த பாடல்

md

எனக்கு பிடித்த பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆசையின் விளைவே ‘எனக்கு பிடித்த பாடல்’ பகுதி :)

தமிழில் எனக்கு இந்த இசையமைப்பாளர் தான் பிடிக்கும் என்றில்லை. என்னை கவரும் எந்த இசையும் எனக்கு பிடித்த இசையே :)

சிறிய வயதில் அதிரடி பாடல்களின் ரசிகனான நான் நாளாக நாளாக எப்படி மெலடி ரசிகனானேன் என்று புரியாத விந்தை.

இத்தனைக்கும் கல்லூரி நாட்களில் நான் ஒரு வெஸ்டர்ன் அமச்சூர் டான்சர். ஜான் பிரிட்டோ நடன குழுவிலும், என் நண்பன் செந்த்திலின் குழுவிலும் ஆடிக்கொண்டிருந்தபோது பெரும்பாலும் fast beat பாடல்களுக்குத்தான் நடனமாடி இருக்கிறேன்..

பின்னர் நான் choreographera கொஞ்ச காலம் இருந்த போதும் அதே நிலைதான். ஆனால் நான் நடனமைத்த சில மெலடிகளால் எனக்கு considerable recognition கிடைத்தது உண்மை.  உதாரணம்,

  • மின்னலேயில் வரும் “வசீகரா”,
  • திருடா திருடாவில் வரும் “புத்தம் புது பூமி வேண்டும்”
  • Dil to Pagal Haiயில் வரும் “Dance of Envy”,
  • ஜோடியில் வரும் “கை தட்டி தட்டி அழைத்தாளே”

ஒரு வேளை வயதாக வயதாக மனம் அமைதியை தேடுகிறதோ என்னவோ ;-)

அடடா..எங்கேயோ அரம்பித்து எங்கேயோ வந்துவிட்டேன்…

ஆகவே மக்களே..இதனால் நான் கூற வருவது என்னவென்றால்…

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் :)

வாருங்கள்..வந்து இளைப்பாருங்கள்

எனக்கு பிடித்த பாடலுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்…

சுவாசிகா

No Responses to “எனக்கு பிடித்த பாடல்”

  1. RaviSuga says:

    Expecting your list of melodies very soon for karoke. Nice to know you are dancer. BTB, have u choreographed for the above said movies or for dance shows? kalaki podunga.

  2. சுவாசிகா says:

    Thanks Ravi!!!

    I never choreographed for movies :)

    I did for dance shows, TV competition shows like Thillana Thillana(SUN TV) and college cultural shows

    சுவாசிகா

Leave a Reply

top