இளைய நிலா – எனக்கு பிடித்த பாடல்

எனக்கு பிடித்த பாடல் பகுதியை, இசைஞானியின் பாட்டுடன் ஆரம்பிக்கிறேன்…
இந்த பாடல் என் எவர்கிரீன் favourite…வருடங்கள் ஒடினாலும் இந்த பாடல் எனக்கு சலிக்கவில்லை
இளையராஜாவின் மேன்மையான மெல்லிசை, வைரமுத்துவின் சுகமான வரிகள், எஸ்.பி.பியின் தேனான குரல். எப்படி அலுக்கும்
இந்த பாடலில் என் favourite
முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ
அடடா என்ன கற்பனை…
என்னதான் சொல்லுங்கள், வைரமுத்துவும் இளையராஜாவும் பிரிந்ததால் தமிழ் சினிமாவும், நாமும் இழந்த இசை காவியங்கள் பல…
இதன் பாடலின் கடைசியில் வரும் கிடார் sequence…வர்ணிக்க வார்த்தை இல்லை
ஒளியும் ஒலியும்
[youtube=http://www.youtube.com/watch?v=owiXDr1xQ8Y]
பாடல் குறிப்பு
- படம் : பயணங்கள் முடிவதில்லை
- இசை : இளையராஜா
- பாடல் : கவிஞர் வைரமுத்து
- பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
- இயக்குனர்: ஆர். சுந்தர்ராஜன்
- தயாரிப்பாளர்: கோவை தம்பி
- பாடலில் நடித்தது : மோகன், பூர்ணிமா பாக்யராஜ், எஸ்.வி.சேகர்
- வெளியான ஆண்டு: 1982
பாடல்
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமேவரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும் (2)வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும் (இளைய நிலா)முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ (2)நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்
நன்றி : பிரசாத்
எனக்கு பிடித்த இந்த பாடல் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்…
தொடர்ந்து பேசுவோம்
சுவாசிகா


சுப்பர் தலைவா, சுகமான ராகம், கேட்பதற்கே இனிமையாக இருக்கிறது, தொடருட்டும் உஙகள் பணி
அருமையான பாடல் மற்றும் இசை. எத்தனையோ முறை கேட்டும் இப்போதும் கேட்க தூண்டும் பாடல். மிக்க நன்றி நண்பரே… காத்திருக்கிறேன் உங்கள் அடுத்த பாடலின் தெரிவுக்காக..
நன்றி ரவி
எனக்க்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பிரேமா
கூடிய விரைவில் எனக்கு பிடித்த அடுத்த பாடலுடன் சந்திக்கிறேன்…
சுவாசிகா