search
top

ஏ.ஆர்.ரஹ்மான் – என்.சொக்கன் – ஒரு வாசகனின் பார்வை

ஏ.ஆர்.ரஹ்மான் புத்தகம்

விமர்சனம் எழுதும் அளவிற்கு நான் விஷயம் தெரிந்தவன் அல்ல. நான் ஒரு சராசரி வாசகன்.

என்னை பொறுத்தவரை ஒரு புத்தகம் என்னை திரும்ப திரும்ப படிக்க வைத்துவிட்டால் அவை சிறந்த புத்தகமே :)

பொதுவாக வெற்றி கதைகளை படிப்பது எனக்கு விருப்பமான ஒன்று. தடைகளையும், இடர்களையும், பிறரின் அலட்சியத்தையும் கடந்து அவர்கள் கடந்து வந்த வெற்றி பாதையை படிப்பது ஒரு சிறந்த உற்சாக டானிக்

எதேச்சையாக சொக்கனின் படைப்புகளை பார்த்து கொண்டிருக்கும் போது இவர் கணிசமாக வாழ்கை வரலாறுகளை எழுதியது இவரின் படைப்புகளை படிக்க தூண்டியது

இவரை பற்றி நான் கேள்விபட்டிருந்தாலும்(என் மனைவி சித்ரா மூலமாக), இவர் எழுத்துக்களை படிப்பது இப்பொழுதுதான்..

இவரின் ஏ.ஆர். ரஹ்மான் புத்தகத்தை பற்றிய என் கருத்து/பார்வையே இந்த இடுகை..

இதற்கு முன்னால் நான் எதற்கும் விமர்சனம் எழுதியேதே இல்லை…அதனால் எப்படி எழுத வேண்டும் என்று தெரியவில்லை :(

ஆனால் அதற்காக இந்த புத்தகத்தை பற்றிய என் பதிவை மிஸ் செய்யவும் மனமில்லை :)

Straight off, இந்த புத்தகத்தை கண்ணை மூடி கொண்டு வாங்கலாம்..Of course…காசு கொடுத்துதான் ;-)

நச்சேன்று மனதில் நின்றவை

  • இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்தது இவரின் எளிமையான நடை..அப்படியே கடகடவென்று வாசித்து விடலாம். குழந்தைகளும் படித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிமை. அட நிசமாதாங்க..நம்புங்க ;-)
  • எளிமையாக இருந்தாலும் நல்ல விவரமாக ரஹ்மான் பற்றி விவரங்களை சுவாரசியமாக தொகுத்துள்ளார்.

முதல் நாள் இரவு இந்த புத்தகத்தை பாதி படித்துவிட்டு அடுத்த நாள் மாலை தேநீர் இடைவெளியில் என் அலுவலக நண்பர்களிடம் தங்கு தடையில்லாமல் 20 நிமிடம் ஏ.ஆர். ரஹ்மானை பற்றி நான் பேசியதே மேல் குறிப்பிட்டிருந்த எளிமையான அதே சமயம் விவரமான நடைக்கும் சான்று

  • ஏ.ஆர். ரஹ்மானின் பிறப்பு முதல் ஆஸ்கர் வென்றது வரை அவரின் வாழ்க்கை பயணத்தை சுவாரசியமாக பதிந்திருக்கிறார். உதாரணம்,
  1. இசை உலகில் நுழைந்தது எப்படி
  2. இளையராஜாவிடம் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது எப்படி
  3. ட்ரம்ஸ் சிவமணியுடன் இவரின் நட்பு ஏற்ப்பட்டது எப்படி
  4. விளம்பர உலகில் கால் பதித்தது எப்படி, முதல் விளம்பரம் எது
  5. ரோஜா வாய்ப்பு கிடைத்தது எப்படி
  6. இந்தி பட உலகில் நுழைந்தது எப்படி
  7. உலக அரங்கில் கால் பதித்தது எப்படி
  8. ஆஸ்கர் வென்ற ஸ்லம்டாக் மில்லியினர் வாய்ப்பு கிட்டியது எப்படி

போன்று ஏகப்பட்ட விஷயங்களை உள்ளடக்கியுள்ளார்

  • வெற்றி கதைகள் மற்றும் வரலாற்றுக் கதைகள் எழுதுவதற்கு ISAS(Information Search and Analysis Skills) மிகவும் அவசியம் என்று என்னுடைய கருத்து. அதாவது
  1. ஒரு தலைப்பை பற்றிய விவரங்களை பல விதமான sourceகளில் இருந்து திட்டமிட்டு தேடுதல்.
  2. தேடிய தகவல்களை ஆராய்தல்
  3. ஆராய்ந்த தகவல்களை வகைபடுத்துதல்
  4. முக்கியமான/அவசியமான தகவல்களை முன்படுத்தி மற்றவைகளை விலக்குதல் அல்லது அவைகளை வேறு பொதுவான இடத்தில் தொகுத்தல்

இது சொக்கனிடம் நிரம்பவே இருக்கிறது. பின் இணைப்பில்(appendix) source list’ஐ பார்க்கும்போது மலைப்பாக இருந்தது. இந்த 176  பக்க புத்தகதிற்காக இவரின் தகவல் சேகரித்த உழைப்பு பாராட்டபட வேண்டிய ஒன்று

  • பொதுவாக ஒருவரின் வெற்றி கதையை எழுதும் போது presenting of excess statistics’ஐ தவிர்க்க வேண்டும்.  உதாரணம் ஏ.ஆர்.ரஹ்மான் 1996 ல் இசையமைத்த படங்களின் விவரம், அவர் இதுவரை வாங்கிய விருதுகள் etc.,etc., இது போன்று statistics அவசியமானதாக இருந்தாலும் இவையெல்லாம் படிக்கும் flowவிற்கு தடைக்கல்லாகும் வாய்ப்புகள் அதிகம். சொக்கன் இதை பின் இணைப்பில் போட்டு content flow affect ஆகாமல் கையாண்டுள்ளார்
  • இவர் அடிப்படையில் இளையராஜாவின் ரசிகராக இருந்தாலும், அதை அப்படியே தள்ளி வைத்து நடுநிலையாக ரஹ்மான் பற்றிய விவரங்களை தொடுத்தது மிகவும் பாராட்டபட வேண்டிய ஒன்று. ராஜாவையும் ரஹ்மானையும் compare பண்ணும் context பகுதியில் இவர் நடுநிலையாக தன் கருத்தை கூறாமல் தள்ளி நின்றதுக்கு ஒரு சபாஷ்!!

ராஜாவையும் ரஹ்மானையும் comparison பற்றிய என் கருத்தை நான் தனி இடுகையாக எழுத வேண்டும்..பார்ப்போம்..

அட..இதையெல்லாம் கவனித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

Reviewனா நெகட்டிவ் பாயிண்டுகளையும் எழுதுணுமாமே :o

மண்டையை குடைந்து யோசித்தாலும்,  மல்லாக படுத்து யோசித்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டியது இவ்வளவுதான் ;-)

  • அந்த அந்த chapterக்கு relavantஆக ரஹ்மானின் புகைபடத்தை பற்றி போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்ன செய்வது, குமுதமும், ஆனந்த விகடனும் என்னை அப்படி பழக்கி விட்டது ;-)
  • சில இடங்களில் வார்த்தை தவறுகள். ஒரு நோட்டில் குறித்து வைத்திருந்தேன். என் மகள் கமலி மாடர்ன் அர்ட் கலரிங்கில் அந்த தவறுகள் மறைந்து விட்டது :) சரி விடுங்கள்…நல்லதை உங்களிடமும், தவறுகளை நண்பர் சொக்கனிடம் பின்னர் சொல்லிவிட்டால் போச்சு ;-)

புத்தக விவரம்:

  • புத்தக தலைப்பு – ஏ.ஆர். ரஹ்மான்
  • பதிப்பகம் – கிழக்கு பதிப்பகம்
  • பக்கங்கள் – 176
  • விலை – ரூ.80/-
  • இணையத்தில் வாங்க இங்கே கிளிக்கவும்
  • ஆஹா FM வானொலி(91.9)யின் ‘கிழக்கு பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் ஏ. ஆர். ரஹ்மான் புத்தகம் பற்றிய அறிமுகம் / கலந்துரையாடல் நிகழ்ச்சி கேட்க இங்கே கிளிக்கவும்

எங்கள் வீட்டின் புத்தக அலமாரியில் தமிழில் ஒரே எழுத்தாளரின் collection வைத்திருக்கிறேன் என்று பார்த்தால் அது சுஜாதா மட்டுமே. இப்பொழுது என்.சொக்கனும் அதில் சேர்ந்து விட்டார்.

கடைசியாக நான் கூற வருவது, கண்ணை மூடிக்கொண்டு இந்த புத்தக்தை வாங்குங்கள் :)

தொடர்ந்து பேசுவோம்

சுவாசிகா

17 Responses to “ஏ.ஆர்.ரஹ்மான் – என்.சொக்கன் – ஒரு வாசகனின் பார்வை”

  1. RaviSuga says:

    I can’t believe this that this is your first review. Congrats, keep it up!

    • சுவாசிகா says:

      நன்றி சொக்கன்.

      I thinks relevant images can definitely value add to your good content.

      I still owe to send spelling mistakes. Will email it in the coming days. Probably I have to read the book again which I will happily do it :)

      அன்புடன்,
      சுவாசிகா

  2. Ram says:

    Is there a pdf of that book available somewhere?

    • சுவாசிகா says:

      நன்றி பிரேமா :)

      நிஜமாகவே இது என் முதல் விமர்சன முயற்சி. இதை விமர்ச்னம் என்று சொல்வதை விட என் போன்ற சராசரி வாசகனின் பார்வை என்று சொல்வதுதான் சரி

      //புத்தகமும் அப்படிதானா என்பதை படித்துவிட்டு சொல்கிறேன் சார்//
      அருமையான புத்தகம். சந்தேகமே வேண்டாம்..

      கண்டிப்பாக படித்துவிட்டு சொல்லுங்கள். முடிந்தால் உங்கள் வலைப்பூவிலும் எழுதுங்கள். ஊருக்கு நல்லது சொல்வது தவறில்லை :)

      அப்புறம் ’சார்’ எல்லாம் வேண்டாம்… நண்பர்களுக்குள் ஏன் இந்த மரியாதை :)

      அன்புடன்,
      சுவாசிகா

  3. என். சொக்கன் says:

    விமர்சனத்துக்கு நன்றி சுவாசிகா, நீங்கள் குறிப்பிட்டுள்ள குறைகளை அடுத்த பதிப்புகளில் களையப் பார்க்கிறோம் :)

    Ram,

    This book is not yet released in e-book format yet, Kizhakku may sell an e-Version later, As of now, we only have Printed books

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

  4. ponnakk says:

    nice review mr. suvasika

  5. kapilashiwaa says:

    விமர்சனமே பன்ன தெரியாத சுவாசிகா – வா ? நீங்க.. ரொம்ப நல்ல பதிவு. புத்தகமும் அப்படிதானா என்பதை படித்துவிட்டு சொல்கிறேன் சார்.

  6. உண்மை. காரணம் இவர் அடைந்த வெற்றியை விட வெற்றிக்குப் பிறகு உண்டான வாழ்க்கை, கொள்கை, உண்மை இது தான் நான் வியந்து கொண்டே இருப்பது. மற்றொருமொரு காரணம் வயது. இவருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. கிடைக்காமலே போய்ச் சேர்ந்தவர்கள் கூட இந்த அளவிற்கு சுய ஓழுக்கமாய் வாழ முடியுமா என்பதற்காக (தமிழ் தட்டெழுத்து கோப்பு படுத்துகிறது) உண்மை என்று சொன்னேன். வாழ்த்துக்கள்.

    • சுவாசிகா says:

      நன்றி :)

      //சுய ஓழுக்கமாய் வாழ முடியுமா //
      உண்மைதான்.
      அவரின் சுய ஓழுக்கத்திற்கு இளையராஜா inspiration என்று கூறி இருக்கிறார்.

      In those times, almost all great musician are addicted to drug/drinks and he has been belief that great musicians use these to relax themselves to produce good music. All these thoughts were broken when he saw Illayaraja who is more onto devotion.

      அன்புடன்,
      சுவாசிகா

  7. யோகா says:

    ஏ.ஆர். ரகுமான் ரசிகனான எனக்கு இந்த புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் போல இருக்கிறது. தகவலுக்கு நன்றி.

    உங்களது வலைமனைக்கு வர டிவிட்டரில் அழைப்பு விடுத்தமைக்கும் நன்றிகள்

    • சுவாசிகா says:

      என் வலைவீட்டுக்கு வந்ததற்கு நன்றி நண்பரே!!

      கட்டாயம் வாங்கி படியுங்கள்..நல்ல புத்தகம்

      அடிக்கடி வாங்க :)

      அன்புடன்,
      சுவாசிகா

  8. சுவாசிகா says:

    நன்றி ரவி..

    என் மனதில் பட்டதை எழுதினேன்.

    நல்ல புத்தகம். முடிந்தால் வாங்கி படித்து பாருங்கள்

    அன்புடன்
    சுவாசிகா

  9. சுவாசிகா says:

    Hi Ram:
    Not sure if they have e-book version of the book.

    Please contact Chokkan at nchokkan@gmail.com or the publisher http://nhm.in/shop/home.php

    அன்புடன்
    சுவாசிகா

Leave a Reply

top