என் (வலை)வீடு

வாங்க வாங்க
என் புது (வலை)வீட்டுக்கு வந்ததற்கு நன்றி..
நமக்குன்னு சொந்தமா ஒரு வீடு வாங்கனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை.. இப்போதைக்கு வலையில ஒரு வீட்டை வாங்கி போட்டுடேன். கூடிய சீக்கிரம் ஒரு நிஜ வீடு வாங்க எல்லாம் நல்லா அமையனும்
ஒரு சொந்த வீடு வாங்க என்ன என்ன அனுபவங்கள் ஏற்படுமோ அதே அனுபவம் எனக்கும் என் நண்பர்களுக்கும் இந்த வலை வீடு வாங்கறதலேயும் ஏற்பட்டது.
என்ன ஒரே வித்தியாசம், நிஜ வீடுன்னா தெருவுல இறங்கி தேடனும்..வலை வீட்ல virtualஆ ஒரு ஒரு இடத்திலேயும் போய் விசாரிக்கனும்.
அங்க ரியல் எஸ்டேட் நிறுவனம்னா இங்க ஹோஸ்டிங் நிறுவனம்
அங்க பத்திர ரிஜிஸ்டேரேஷ்ன்னா இங்க டொமைன் ரிஜிஸ்டேறேஷன்
அங்க வீடு கட்ட கன்ஸ்டர்க்ஷன் நிறுவனம்னா இங்க நல்ல வலுவான CMS / Blog engine
அங்க இண்டீரியர் டெக்கேரெஷன்னா இங்க நல்ல site template
இத வீடுன்னு சொல்றத விட அடுக்ககம்(அபார்ட்மெண்ட்)னு சொல்லலாம். ஏன்னா நானும் என் நண்பர்கள் 4 பேரும் காசு போட்டு வாங்கியிருக்கோம்..
இதுல விஷயம் என்னனா இவிங்க எல்லாரும் அவங்க வீட்டை செட் பண்றத விட்டுட்டு கடந்த 3 நாளா என் வீட்டை செட் பண்றதிலேயே கருத்தா இருந்தாய்ங்க..நானும் என் மேல எவ்வளவு பிரியமா இருக்காய்ங்களேன்னு ஒரு நிமிஷம் தப்பா ஃபில் பண்ணிட்டேன்..
அப்புறம்தான் தெரிஞ்சது என் வீட்டை செட் பண்ணி விஷயத்த கத்துகிட்டு, முக்கியமா குறையெல்லாம் நோட் பண்ணிக்கிட்டு(என்கிட்ட சொல்ல மாட்டாங்களாம்
) , அப்புறம் அவிங்க வீட்ட அந்த குறையில்லாம் சரி பண்ணிட்டு அவங்க குடி வருவாய்ங்களாம். .
நண்பர்கள் கூட்டத்தில மூணு பசங்களும் இப்படி இருக்காய்ங்களேன்னு எங்க கேங்கில் நாலாவதாக இருக்கும் நண்பியிடம் புலம்பினா கடைசியா இதுக்கு மெயின் ஐடியா கொடுத்ததே அவதானாம்.என்ன வில்லதனம்
ஆக, இப்போதைக்கு இந்த அடுக்ககத்தில நான் மட்டும்தான் பால் காய்ச்சி குடி வர போறேன். பில்டிங், பேஸ்மண்டும் ஸ்டராங்கா இருக்கான்னு பார்த்துட்டு அப்புறம்தான் என் நண்பர்கள் கேங் ஜாயினிங். சரி விடுங்க, எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா
வீட்டை பார்க்க வந்த (நல்லாவே) கவிதை எழுதும் என் அலுவலக நண்பர் பே.சு.சங்கரக்குமாரையும் இந்த வீட்ல கவிதை எழுத இழுத்து போட்டாச்சு
ரொம்ப நாளா ஒரு தமிழ் வலைப்பூ ஆரம்பிக்கனும்னு சொல்லிட்டிருந்தார். என் கூட கொஞ்ச நாள் இருந்து பழகிக்கோங்கன்னு கையோட கூட்டிக்கிட்டு வந்துட்டேன்
இனிமே நான் கவிதை எழுதிறது குறைஞ்சிடும். அதுக்காக சந்தோஷபடாதீங்க. அப்பப்போ கெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் குடுப்பேனாக்கும்
எனக்கு குடுக்கும் ஆதரவை விட என் நண்பர் பே.சு.சங்கரக்குமாரைக்கு அதிகமாக கொடுக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..
உங்களுக்கு என் வீடு பிடிச்சிருக்கா?? முடிஞ்சா என் புது வீடு எப்படி இருக்குன்னு எங்கிட்டேயும் உங்க நண்பர்கள் கிட்டேயும் சொல்லுங்க
உங்க நேரத்தை ஒதுக்கி வந்ததற்க்கு ரொம்ப நன்றி !!!
கண்டிப்பா அடிக்கடி வாங்க
தொடர்ந்து பேசுவோம்
சுவாசிகா


நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.
நன்றி கிஷோர்
அடிக்கடி வாங்க!!
அன்புடன்,
சுவாசிகா
வாழ்த்துக்கள்!
))
நான் போயி பந்தியில உக்கார்ந்து சாப்பிட்டு வந்து பிறகு பேசுறேன்
)
வீடு நல்லாவே இருக்கு !
நல்லா வயிறு நிறைய கேட்டு வாங்கி சாப்பிடுங்க
அன்புடன்
சுவாசிகா
அழகான வீடு. வாழ்த்துகள், எல்லா வளமும் கிடைக்கட்டும்!
- என். சொக்கன்,
பெங்களூர்.
நன்றி நண்பரே…நீங்க வந்ததில் ரொம்ப சந்தோஷம்..அடிக்கடி வாங்க..
அன்புடன்,
சுவாசிகா
வாழ்த்துக்கள்! பந்தி எங்க??????
நான் ஒரு மென்பொருள் (பரி)சோதனையாளன்,இதுவரை குறை எதுவும் தென்படவில்லை
நன்றி..பந்தியும் virtual தான்
அடிக்கடி வாங்க..
அன்புடன்,
சுவாசிகா
வாழ்த்துகள்…வாக்குறுதி அளித்தபடி பலகாரங்களை அனுப்பி வைக்கவும்
வருகைக்கு நன்றி நண்பரே
பலகாரங்கள் ஈஸ் ஆன் தி வே
அடிக்கடி வாங்க!!!
அன்புடன்,
சுவாசிகா
டிசைன் எல்லாம் பக்காவா இருக்கு. குறிப்பா மேலே இருக்குற ட்விட்டர்/ஆர்.எஸ்.எஸ்/ஃபேஸ்புக் க்ரெயான் கிறுக்கல் சூப்பர்! எத்தனை நாள் வேலை செஞ்சீங்க? வேர்ட்பிரஸ் ப்ரீமியம் தீம் காசு கொடுத்தே வாங்கியிருக்கலாமே?
நன்றி நண்பா..
சைட் தீமை காசு கொடுத்து வாங்கி நானும் என் நண்பர்களும் கடந்த 3 நாளா customize செஞ்சோம்..its a time work
மொத்தமா இந்த சைட்க்கு நாங்க invest பண்ண டைம் கடந்த 3 நாள்தான்..இதற்காக உழைச்ச என் நண்பர் கேங்குக்கு நன்றி
கண்டிப்பா அடிக்கடி வாங்க!!!
அன்புடன்,
சுவாசிகா
வீடு சூப்பர்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
நன்றி டாக்டர்
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
அடிக்கடி வாங்க!!!
அன்புடன்,
சுவாசிகா
வீடு நல்லா இருக்கு. நீங்களும் நல்லா இருங்க!!
நன்றி நண்பரே
உங்க ஆசிர்வாதம்…
கண்டிப்பா அடிக்கடி வாங்க
அன்புடன்,
சுவாசிகா
ம்…
நகரின் மையத்தில் இருக்கிற வீடு மாதிரி, சின்னதா முகவரி.
உள் கட்டுமானம்.
விருந்தினர் உபசரிப்பு.
விருந்து..
எல்லாமே அருமை. வாழ்த்துக்கள்!
நன்றி நண்பரே!!
நானும் எங்க நண்பர் படையும் தேடி தேடி அலசி ஆராய்ந்து பார்த்து பார்த்து கட்டின வீடு..பாசக்கார பசங்க
உங்க எல்லாருக்கும் பிடிச்சத பார்த்து எங்க எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம்
அடுத்து அவங்க வீட்டுக்கு நான் என்னால முடிஞ்சத செய்யனும்..
கண்டிப்பா அடிக்கடி வாங்க!!
அன்புடன்,
சுவாசிகா
புது வீடு மிக அருமை. கண்ணுக்கு இதமான Backgroundம் அழகான தமிழ் fontகளும் மனதை கொள்ளை கொள்கின்றன. Layout is very good. வலை மூலம் தமிழ் வளர்க்கும் உங்கள் பணி சிறக்கவும்
உமது சிந்தனை மேன்மேலும் வளரவும் சிறந்த பல படைப்புகளை தரவும் என் வாழ்த்துக்கள்.
அண்ணே வணக்கம்.. நீங்க வந்ததில் ரொம்ப சந்தோஷம்
site design ஒருத்தருக்கு கிட்ட இருந்து வாங்கி நண்பர்களுடன் customize செஞ்சோம்..நண்பர்கள் support எனக்கு பெரிய பலம். நண்பர்களுக்கு நன்றி
//தமிழ் வளர்க்கும் உங்கள் பணி//
கண்டிப்பா…பிரகாஷ், சொக்கன், பாலா, இட்லிவடை, இலவசம், பாரா, பினாத்தல், ஆயில்யன் அவங்கள பார்த்து நானும் என்னால முடிஞ்சத செய்யனும்னு ஆசைதான் தமிழில் ஒரு வலைப்பூவில் ஆரம்பிச்சு ஒர் தமிழ் வீடு வாங்கி போடறவரைக்கும் என்னை ஊக்கபடுத்தி இன்னும் நிறைய பண்ணணும்னு ஊந்தி தள்ளிக்கிட்டுருக்கு…கண்டிப்பா என்னால முடிஞ்சத பண்ணுவேண்ணே…
என்னை பார்த்து தமிழ் தளம் ஆரம்பிக்கனும்னு சொன்ன நண்பர் பே.சு.சங்கரகுமாரை கூட்டிக்கிட்டு வந்திருக்கிறேன்
நம்மளை பார்த்து 4 பேர் அவங்களும் தமிழ் தளம் ஆரம்பிப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை..உங்க எல்லார் ஆதரவும் இருந்தா எல்லாம் நல்லபடியா நடக்கும்
//உமது சிந்தனை மேன்மேலும் வளரவும் சிறந்த பல படைப்புகளை தரவும் என் வாழ்த்துக்கள்//
நன்றிண்ணே!! என்னால முடிஞ்சத கண்டிப்பா செய்யறேன்..
அடிக்கடி வாங்கண்ணே
அன்புடன்,
சுவாசிகா
வருக ! வாழ்த்துகள்!
நன்றி நண்பரே!!
அடிக்கடி வாங்க
அன்புடன்,
சுவாசிகா
அழகான வீடு. வாழ்த்துகள்.
நன்றி ரவி
அடிக்கடி வாங்க
அன்புடன்,
சுவாசிகா
வீடு நல்லாவே இருக்கு.. உங்கள் வரவேற்பும் பிரமாதம்..
சாப்பாடு கூட நல்லா இருக்கே..
தொடர்ந்து அடிக்கடி வருவேன்..:)
பதிவர்கள் எல்லோருக்கும் உள்ள அனுபவத்தை சுவையாகப் பகிர்ந்துள்ளீர்கள்..
அசத்துங்க..
சுவாசிகா பெயர் கூட பிரமாதம்..
நன்றி லோஷன்
//தொடர்ந்து அடிக்கடி வருவேன்..//
கண்டிப்பா வாங்க..இந்த வீடு எப்பவுமே உங்களை வரவேற்க தயாராக இருக்கும்..
அன்புடன்,
சுவாசிகா