மழலை

என் நண்பர் பே.சு.சங்கர்க்குமாரை ஒரு கவிதையுடன் அறிமுகப்படுத்துவதுதான் பொருத்தமானது என்று கருதியதால் என் மகள் கமலியின் முதல் பிறந்தநாளுக்கு அவர் எழுதிய வாழ்த்து கவிதையுடன் இங்கே அவரை அறிமுகபடுத்துகிறேன்
ஹைக்கூ கவிதை எழுதும் என் பேனா – இன்று
ஹைக்கூ குழந்தைக்கு கவிதை எழுதுகிறது
தேசப்பற்றை பல பேர் பேச்சில் காண்பிக்கும்போது – நீயோ
அதை பிறப்பில் காண்பித்துவிட்டாய்
கலப்படம் இல்லா உன் புன்னகையுடன் – உன்னை
கணினியில் காணும் போது – நாங்கள் கொண்ட
கவலைகள் உடைந்து போகும்
தவழும் தமிழே – நீ பேசும்
மழலைத் தமிழை மற்றவர்களுக்கும் கற்று கொடுக்க வேண்டும்
ஏனேன்றால் இப்பொழுதெல்லாம் ஒழுங்காக தமிழ் பேசுவது
உன் போன்ற குழந்தைகள் மட்டும்தான்
பளிங்கு தரையில் பனி மேகமே – நீ
தவழ்கையில் உன்னோடு சேர்ந்தே தவழட்டும் – உன்
சாதனைகளும், சந்தோஷங்களும்
தண்ணீர் ஒட்டா கமலம் போல
கமலமே உன் கண்களும்
கண்ணீர் ஒட்டாமல் இருக்கட்டும்
எனக்கு தெரிந்த தமிழை – என்
பேனா மையில் ஏற்றி
உனக்காக நான் எழுதிய இந்த கவிதை
உனக்கு புரியும் வரை இதுவும்கூட ஒரு மழலைதான்
நண்பர் கவிதைகளுடன் கூடிய விரைவில் உங்களை சந்திப்பார்
தொடர்ந்து பேசுவோம்
சுவாசிகா


குழந்தையும் கவிதையும் அழகு. என்னதான் கவலை இருந்தாலும், நம் குழந்தையின் சிரிப்பை நினைத்து பார்தாலே போதும், கவ்லை பஞ்சாய் பறந்து போகும்
உண்மைதான், குழந்தையின் சிரிப்பு கவலையை நீக்கும் சிறந்த மருந்துதான்..
அதுவும் மழலையின் பொக்கை வாய் சிரிப்பு முதல் பல் முளைக்கும் வரையே கிடைக்கும் சிறப்பு பரிசு!!
படத்தில் இருக்கும் குழந்தை என் மகள்தான்..முதல் பிறந்தநாள் விழா திருசெந்தூர் முருகன் கோயிலில் நடந்தபோது காது குத்துக்கு முன்னால் எடுத்தது
அன்புடன்,
சுவாசிகா
வணக்கம் இரவி:
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
என்றும்,
என்றென்றும்,
அன்புடன்,
பே.சு. சங்கரக்குமார்
நல்ல கவிதை. உங்கள் குழந்தை மிக அழகு சுவாசிகா. அம்மாவின் சாயலை கொண்டுவிட்டாள் போல:)
நன்றி பிரேமலதா..நண்பர் சங்கர்க்குமாரிடம் உங்கள் பாராட்டுகளை கண்டிப்பாக சொல்லுகிறேன்…
//அம்மாவின் சாயலை கொண்டுவிட்டாள் போல//
உண்மைதான்
அதில் பெருமைதான் எனக்கு
அடிக்கடி வாங்க…
அன்புடன்,
சுவாசிகா
வணக்கம் பிரேமா :
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
என்றும்,
என்றென்றும்,
அன்புடன்
பே.சு. சங்கரக்குமார்