search
top

ஐ லவ் யூ

ஐ லவ் யூ

காட்சி 1:

அலாரம்கிர்ர்ர்ர்ர்ர்.கிர்ர்ர்ர்ர்..அலாரம் அடித்தவுடன் அடித்து பிடித்து எழுந்தான் திரிஷல..

மணியை பார்தான்.. காலை 8:00 மணி..சே..6 மணிக்கு தானே அலாரம் வைக்கனும்னு நினைச்சேன்..நைட் மப்புல மாத்தி வைச்சிட்டேன் போல..

சரி பரவால்ல.. 12 மணிக்குதானே கீதாவை காஃபி ஷாப்புக்கு வர சொல்லியிருந்தேன்..

என்னடா விஷயம்னு எவ்வளவு தடவ கேட்டாலும் நேர்ல வா சொல்றேன்னு ஏகத்துக்கு பில்டப் வேற கொடுத்திருகோம்ல :!:

இன்னைக்கு கண்டிப்பா சொல்லிரனும்..எவ்ளோ நாளைக்குதான் மனசுக்குள்ளேயே வைத்திருக்கிறது :?:

காட்சி 2:

சீப்புமணி 9:00.. விபார்த்தி குளித்து ரெடியாகி கொண்டிருந்தாள்..தலை வாரிக்கொண்டிருக்கும்போது மனதிற்குள் இன்று வெங்கடவிடம் சொல்ல போகும் விஷயத்தை அசை போட்டுக் கொண்டிருந்தாள்..

வேறு வழியில்லை..அவன் சொல்லுவான் சொல்லுவான் என்று இவ்வளவு நாள் காத்திருந்தாகிவிட்டது..என் மனதில் இருப்பதை இன்று சொல்லிவிட வேண்டியதுதான்

இன்னைக்கு கண்டிப்பா சொல்லிரனும்..எவ்ளோ நாளைக்குதான் மனசுக்குள்ளேயே வைத்திருக்கிறது :?:

காட்சி 3:

பைக்மணி 10:30 பைக்கை எட்டி உதைத்தான் நாகா..பின்னே..இன்று எவ்வளவு முக்கியமான நாள். சைந்தவிய பார்த்து முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டிய நாள்..சமயம் பார்த்து கழுத்தறுக்குதே சனியன்..சரி ஆட்டோ பிடித்து போக வேண்டியதுதான்..

கடைசி தடவையா கிக்கரை உதைத்தான்..என்ன அதிசயம்..பைக் ஸ்டார்ட் ஆகிவிட்டது..சற்று முன் உதைத்த பைக்கை இப்பொழுது வாஞ்சையுடன் தடவி கொடுத்துவிட்டு சொன்னான்..இல்லை..இல்லை.. உளறினான்

சாரிடா..டென்ஷன்ல உன்னைய உதைச்சிட்டேன்..உனக்கு தெரியாதா இந்த விஷயத்தால நாலு நாளா தூங்காம குழப்பத்துல நான் பட்ட அவஸ்தை..

இன்னைக்கு கண்டிப்பா சொல்லிரனும்..எவ்ளோ நாளைக்குதான் மனசுக்குள்ளேயே வைத்திருக்கிறது :?:

காட்சி 4:

ஸ்கூட்டிமணி 11:55 ஸ்கூட்டியை பார்க் செய்து விட்டுவிட்டு அந்த காம்ப்ளக்ஸினுள் நுழைந்தாள் ராகினி..

தன் ஹேண்ட் பேக்கில் உள்ள பேப்பரை அர்த்ததுடன் தடவிப் பார்த்துக் கொண்டாள்..பின்னே..என் மனதில் இருப்பதை மோகனிடம் சொல்லப்போவது இதுதானே :!:

இன்னைக்கு கண்டிப்பா சொல்லிரனும்..எவ்ளோ நாளைக்குதான் மனசுக்குள்ளேயே வைத்திருக்கிறது :?:

காட்சி 5:

காஃபி ஷாப்காஃபி ஷாப்பில் நுழைந்து தன்னை தேடிய கீதாவின் தலையில் நச்னு குட்டினான் மோகன்..போடா லூசுன்னு சொல்லி தலையை தேய்த்து கொண்டாள் கீதா..வலிக்கவில்லை ஆனாலும் இந்த பில்டப் பிடித்திருந்தது..மோகன் கவலைப்படுவான் என எதிர்பார்த்தாள்..ஆனால் :( மிஞ்சியது..

சரி சொல்லுடா..ஏன் கூப்பிட்ட..போன்ல எவ்வளவோ கேட்டாலும் சொல்லாம ஒரே பில்டப்பு வேற..உன்னால ஒரு முக்கியமான வேலையை விட்டுட்டு வந்திருக்கேன் தெரியுமா..சொல்லு என்ன விஷயம்.

இல்ல கீதா..நாலு நாளா சொல்லனும்னு இருந்தேன்..எவ்ளோ நாளைக்குதான் மனசுக்குள்ளே வைச்சிருக்கிறது..அதான் இன்னைக்கு சொல்லிரலாம்னு உன்னை வரச்சொன்னேன்..

என்ன நான் சொல்ல வந்த மாதிரியே இவனும் சொல்றான் என கீதா அதிர்ச்சியானாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் பில்டப்பு போதும் மேட்டருக்கு வா..என்றாள்

இல்ல கீதா..என்னடா இவன் தீடீர்னு இப்படி சொல்றானேன்னு தப்பா நினைச்சுகாதே..நானும் நாலு நாள் யோசிச்சேன்..இதுதான் சரின்னு தோணிச்சு கீதான்னு ஒரு செகண்ட் இடைவெளி விட்ட மோகன் சொன்னான்

ஐ லவ் யூ

ஒரு கணம் அதிர்ச்சியான கீதா, சட்டென்று பரவசமாகி தன் கைப்பையில் இருந்த பேப்பரை எடுத்து இந்தா..இதான் நான் என் மனதில் வைத்திருந்தது என்றுஅவனிடம் நீட்டினாள்..

சட்டென்று நீட்டிய கையை பின்வாங்கி பேப்பரை கிழித்து போட்ட கீதா மோகனிடம்..இல்லைடா..இது இனிமே உபயோகப்படாது..உங்கிட்ட சொல்லிறது பெட்டர்.. என நாலைந்து விநாடி சஸ்பென்ஸை வளர விட்டுவிட்டு மோகனிடம் கீதா சொன்னாள்

ஐ லவ் யூ

என்று கூறி விழுந்து விழுந்து :lol:

ஒரு கணம் அதிர்ச்சியான மோகன்..சட்டென்று ரிலாக்ஸாகி அடிப்பாவி..நான் நீ என்ன சொல்லுவியோன்னு பயந்துட்டே இருந்தேன்..கடைசில நீயும் அந்த டைட்டிலைதான் ஃபிலிம் இன்ஸ்டியுட் குறும்பட போட்டிக்காக நாம எடுக்க போற படத்துக்கு நினைச்சியா..

நேனு ஏமி செய்யாலி பாபா, நீதானே நச்னு ஒரு டைட்டில் கேட்ட..நம்ம குறும்படம் லவ்வை base பண்ணதுதானே..இந்த டைட்டில் தான் நச்னு judge மனசிலேயும் ரீச் ஆகும்னு தோணிச்சு..என்ன சொல்ற திரிஷல வெங்கட நாக மோகன் பாபு..நான் சொன்னது சரிதானே என ;)

ஏய்..என் முழு பெயரை சொல்லி கூப்படாதேன்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன்..அப்புறம் நான் உன் ஃபுல் பெயரான விபார்த்தி சைந்தவிய ராகினி கீதான்னு கூப்பிட வேண்டி வரும்..ஆமா..

சரி..சரி விடு..நாம இப்படி மாத்தி மாத்தி பேர கூப்டுட்டு இருந்தா போட்டியே முடிஞ்சிரும்..சரி கதையை டிஸ்கஸ் பண்ணலாமா..டேய் அதுக்கு முன்னாடி ஏதாவது ஆர்டர் பண்ணு..வந்து அரை மணி நேரம் ஆச்சு..சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்..

ஒகே..பேரர்..2 சிக்கன் சாண்ட்விச் & காப்பிச்சீனோ என ஆர்டர் கொடுத்த மோகன்..

ஆமா கீதா..நேத்து ஒரு புரொடியுஸர் கிட்ட கதை சொல்ல போயிருந்தியே..நீவு ஈ கதா செப்பாவு?

சத்தியமா இந்த கதையில்லப்பா..போதுமா..நம்ம கதையை டெவலப் பண்ற கதையை பார்ப்போமா..

One second..one second..Do you love me?! எனறு கேட்ட மோகனிடம்

அதானே பார்த்தேன்..இன்னும் கேட்கலியேன்னு..நம்ம இரண்டு வருஷ லவ் லைஃப்ல நீ இத கேட்காத நாளே கிடையாதே…ஒகே நானும் என் attendanceஐ போட்டுறேன்..

யெஸ்..ஐ லவ் யு..மை டியர் லவ்வபிள் இடியட்…

போதுமா…இப்பவாவது வேலையை பார்போமா என்று கீதா மோகனிடம் கதையை விவாதிக்க ஆரம்பித்தாள்….

ஏங்க..இனிமே அவங்க கதையை டிஸ்கஸ் பண்ண போறாங்க..நாம் கிளம்பலாம்.. 8)

******************************************************************

பாஸ்..இருங்க..போறதுக்கு முன்னாடி இந்த கதை எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டு போங்க :)

தொடர்ந்து பேசுவோம்

சுவாசிகா

சர்வேசன்500 – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை

நன்றி

  • சிறுகதை எழுத ஏகப்பட்ட டிப்ஸ்ஸை வாரி வழங்கிய அண்ணன் யு.எஸ்.தமிழன் @dynobuoy அவர்களுக்கும்,
  • @orupakkam ஸ்ரீதர் அவர்களுக்கும்,
  • சும்மா வெட்டி வெட்டி எடிட் பண்ணுங்க..அவ்வளவுதான் உங்க கதை ரெடி?! என்று டவிட்டிய நண்பர் writer @nchokkan அவர்களுக்கும்

நன்றி..நன்றி..நன்றி!!

32 Responses to “ஐ லவ் யூ”

  1. dynobuoy dynobuoy says:

    @ksawme தலைவா… கொலவெறில கொத்தீட்டீங்க! இத படிக்கறவங்க என்னையும் சேர்த்து காண்டுல அடிப்பாங்களே:)))
    via Twitoaster

    • penathal penathal says:

      @dynobuoy உங்களை”யும்” ஆ? உங்களை மட்டும்தான் ஒரு படையே தேடுது இப்ப! @ksawme
      via Twitoaster

      • ksawme ksawme says:

        @dynobuoy ஏங்க..உங்க பேர ரொம்ப டேமேஜ் பண்ணிட்டேனா?!என்னால முடிஞ்சது இவ்வளவுதான் :( குறைகள் சொன்னால் திருத்தி கொள்வேன்.. @penathal
        via Twitoaster

        • penathal penathal says:

          @ksawme சேச்சே .. தப்பா எடுத்துக்காதீங்க. கதைக்கான வடிவம் கூடி வரலை. அந்தப் பேருங்களை எங்க பிடிச்சீங்க?
          via Twitoaster

          • ksawme ksawme says:

            @penathal நன்றி..வேறு எதாவது குறைகள் இருந்தாலும் கூறுங்கள்..எனக்கு உபயோகமாக இருக்கும்..என் நண்பர்களின் பெயர்களை லைட்டா மாத்தி போட்டேன்..
            via Twitoaster

          • penathal penathal says:

            @ksawme நண்பர்கள் பெயர்களை கதையில் உபயோகப்படுத்தலாம். எல்லா நண்பர்களின் பெயரையும் ஒரே கதையில் ஒரே பாத்திரத்துக்கு என்பது இமா.
            via Twitoaster

        • dynobuoy dynobuoy says:

          @ksawme >பேர ரொம்ப டேமேஜ் < க்கும்… நாங்கென்ன பெரிய பிஸ்தாவா… சும்மா பில்ட்-அப்புதான் :) ))
          via Twitoaster

  2. writerpayon writerpayon says:

    @ksawme இப்போதைக்கு நல்ல முதல் முயற்சி. அடுத்த முயற்சியில் நுண்ணரசியலை சேர்க்க முயலுங்கள். இப்படி படிப்படியாகத்தான் வளர வேண்டும்.
    via Twitoaster

    • ksawme ksawme says:

      @writerpayon நன்றி நண்பரே :-) //அடுத்த முயற்சியில் நுண்ணரசியலை// அதை எப்படி சேர்ப்பது?!
      via Twitoaster

      • writerpayon writerpayon says:

        @ksawme எதிர்மறை கதாபாத்திரங்களை உருவாக்கி சாதி/வர்க்கம்/பாலினம் சார்ந்த அரசியலை புகுத்துங்கள்.
        via Twitoaster

        • SridharNarayana SridharNarayana says:

          @writerpayon >பாலினம் சார்ந்த அரசியலை<ஆரோக்யா பால் / ஆவின் பால் அரசியலா? ஜூவி கட்டுரையா எழுதறாரு @ksawme :)
          via Twitoaster

  3. SridharNarayana SridharNarayana says:

    @ksawme :) இப்படி ‘நன்றி’ன்னு சொல்லிட்டா கதையைப் பத்தி நல்லதாத்தான் சொல்லனுமோ? :)
    via Twitoaster

  4. ksrk ksrk says:

    @ksawme ட்விஸ்ட் நல்லாருக்கு. வாழ்த்துக்கள்.
    via Twitoaster

  5. ksrk ksrk says:

    @ksawme /மணியை பார்தான்.. காலை 8:00 மணி..சே..6 மணிக்கு தானே அலாரம் வைக்கனும்னு/ இன்னும் கொஞ்சம் எடிட் பண்ணலாம். எத்தனை மணி பாருங்க. :-)
    via Twitoaster

  6. பேரு வைக்கிற விசயத்தில செம டெரர் காமிச்சிருக்கீங்க பாஸ் :) ))

    இந்த ஐ லவ் யூ வெவகாரம் நிசமாவே நச் சமாச்சாரம்தான் – சொன்னாலும் சரி சொல்லாட்டியும் சரி யாருக்கோ ஒரு நச் இருக்குல்ல :)

    • சுவாசிகா says:

      நன்றி ஆயில்யன் :)

      அது என் நண்பர்களின் பெயர்தான்..ஆந்திராக்காரர்கள் இம்மாதிரி பெரிய பெயர்கள் வைத்திருப்பது சகஜம்.அதையே இந்த கதைக்கு மையமாக உபயோகப்படுத்தினேன்..

      அன்புடன்,
      சுவாசிகா

  7. Mohan Kumar says:

    வித்யாசமாக உள்ளது. முடிவை சுருக்கியிருக்கலாம்.

    அட்டகாசம் தலைவா. அந்த கார் போகிற மாதிரி கதை போகிறது. என்ன வேகம்.. என்ன நடை..

    இந்த எளியவனும் கதை போட்டியில் கலந்துள்ளேன். “அடுத்த வீட்டு பெண்” கதை படிக்க எனது blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/

    • சுவாசிகா says:

      நன்றி மோகன் :)

      //முடிவை சுருக்கியிருக்கலாம்//
      கதை முடிவில் ’நச்’ கொண்டு வர மெனக்கெட்டதால் சுருக்க முடியவில்லை.

      //இந்த எளியவனும் கதை போட்டியில் கலந்துள்ளேன்//
      நானும் எளியவந்தான்..கதை எழுத்திலும் நான் புதியவனே..கண்டிப்பாக வருகிறேன் :)

      அன்புடன்,
      சுவாசிகா

  8. சுவாசிகா, நல்ல கதை. ஒரு சில மாற்றங்கள் செய்தால் இன்னும் நச் சென்று இருக்கும் என்று எண்ணுகிறேன்.
    என் பரிந்துரைகளை ஏற்பதும் ஏற்காதததும் உங்கள் விருப்பம்.

    காட்சி 1: த்ரிஷல் – கீதாவிடம் சொல்ல விரும்புகிறான்.
    காட்சி 2: கீதா வெங்கட்டிடம்
    காட்சி 3: வெங்கட் விபார்த்தியிடம்
    காட்சி 4: விபார்த்தி மோகனிடம்

    என்று சொல்லிவிட்டு கடைசியில் அனைவரும் ஒரு(இரண்டு) பேர் என நச் என்று முடித்திருக்கலாம்.

    • சுவாசிகா says:

      நல்ல யோசனைகள்.. மிக்க நன்றி!! உங்கள் பரிந்துரைகள் கதையை இன்னும் விறுவிறுப்பாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை

      ஆனால் கதையை போட்டியில் பதிவு செய்தாகிவிட்டது..இப்பொழுது அதில் மாற்றங்கள் செய்வது சரியில்லை என்று கருதுகிறேன்..

      உங்கள் கருத்துக்கும் நேரத்துக்கும் மிக்க நன்றி..

      கண்டிப்பாக அடிக்கடி என் புது வலை வீட்டுக்கு வாருங்கள்

      அன்புடன்,
      சுவாசிகா

  9. Ravi Suga says:

    குமுதத்தில சிறுகதை வருவதுபோல் சுவாரசியமாக இருக்குதுங்க, லாங் பேர நீங்க தத்ரூபமாக கையாண்டிருகிங்க, வெற்றியடைய வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதினால் சிறுகதையில் புகுந்து விளையாடும் ஆற்றல் உங்களிடம் இருப்பதாக எண்ணுகிறேன்.

    • சுவாசிகா says:

      நன்றி ரவி :)

      தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்..

      அன்புடன்,
      சுவாசிகா

  10. “ஐ லவ் யூ” என்பது நான்கு முறை தமிழிலும், ஒரு முறை ஆங்கிலத்திலும் உள்ளது.

    :D

    யூத் ஃபுல்லான கதை போல். ம்ம்… ரைட்டு.

    வெற்றி பெற வாழ்த்துக்கள். :D

    • சுவாசிகா says:

      நன்றி சாம்ராஜ்ய ப்ரியன் :)

      நேரம் கிடைக்கும்போது என் வலை வீட்டுக்கு அடிக்கடி வாருங்கள்!!

      அன்புடன்,
      சுவாசிகா

  11. sudhan says:

    HI swami, good line da.. expecting more from u..
    ganapathy, VMHS

    • சுவாசிகா says:

      நன்றி நண்பா :)

      கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன்..

      நேரம் கிடைக்கும்போது அப்பப்போ வா :)

      நீ VMHSன்னு சொல்லவே தேவையில்லை..உன்னையெல்லாம் மறக்க முடியுமா ;)

      அன்புடன்,
      சுவாசிகா

  12. சின்னம்மணி says:

    நல்லா இருக்குங்க சுவாசிகா. நான் கூட ஏதாச்சும் நாய் பூனை லவ் பண்ணுதுன்னு முடிப்பீங்கன்னு நினைச்சேன். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • சுவாசிகா says:

      நன்றி சின்னம்மணி :)

      நேரம் கிடைக்கும்போது அடிக்கடி என் வலைவீட்டுக்கு வாங்க

      அன்புடன்,
      சுவாசிகா

  13. nanaani says:

    நல்லாருக்கு. ஐ லவ் யூ-வை விட பெயர் குழப்பமும் எல்லாம் ஒரே பெயர்-ங்குறதுதான் நச்னு இருக்கு.
    வாழ்த்துக்கள்!!

    • சுவாசிகா says:

      நன்றி நானானி :)

      நேரம் கிடைக்கும்போது அடிக்கடி என் வலைவீட்டுக்கு வாங்க…

      அன்புடன்,
      சுவாசிகா

  14. காட்சி காட்சி என்று எழுத தேவையில்லை.

    ஒரு கோடு போட்டு எழுதினாலே போதும்.

    நல்லாருக்கு

    • சுவாசிகா says:

      நன்றி ரவி :)

      //காட்சி காட்சி என்று எழுத தேவையில்லை.

      ஒரு கோடு போட்டு எழுதினாலே போதும்//

      பிரெஷண்டேஷன்காக காட்சி 1,2,3 என்று வகைபடுத்தினேன்..

      அன்புடன்,
      சுவாசிகா

Leave a Reply

top