search
top

ட்விட்னாங்க!!

ட்விட்னாங்க

ட்விட்டர் – 140 எழுத்துக்களுக்குள் ’என்ன நடக்கிறது’ என்ற கேள்விக்கு அவ்வப்போது நாம் விடை சொல்லும் ஒரு மேடை..

இந்த 140 வரைமுறைக்குள் எத்தனையோ விஷயங்கள் நடக்குது

  • நகைச்சுவை,
  • நையாண்டி,
  • கதை,
  • விவாதம்,
  • சண்டை – சாம பேத தான தண்டம்னு சும்மா எல்லா ரேஞ்சிலேயும் நடக்கும் :)
  • கவிதை,
  • வெண்பா,
  • கருத்து,
  • தகவல்,
  • குறள்(ஒரு விளம்பரம் ;) )

தமிழ் ட்விட்ர்களின் மொழி மற்றும் நகைச்சுவை ஆளுமை என்னை பல முறை பிரமிக்க வைத்திருக்கிறது..அவ்வவ்போது என்னை ’அட’ போட வைத்த ட்விட்கள்,ட்விட்டுரையாடல்கள் பல…

அதை என் வலைவீடு மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடிவு செய்ததின் விளைவே இந்த ‘ட்விட்னாங்க’ பகுதி

ஏற்கனவே இந்த பகுதியில் நீங்கள் மிகவும் ரசித்த(மறுபடியும் ஒரு விளம்பரம் :) )  ‘அடடா..வடை போச்சே!!’ ட்விட்டரில் சுட்டது..சே..நடந்ததுதான்

ஆகவே நண்பர்களே..கூடிய விரைவில் உங்களை சிரிக்க, சிந்திக்க, ரசிக்க வைக்கப்போகும் ட்விட்டுரையாடல்களை படிக்க தயாராக இருங்கள்

விளம்பரம் : அடுத்த ட்விட்னாங்க இடுகையின் தலைப்பு ’அசின் – ஒரு இலக்கண குறிப்பு!!’

காண சே..படிக்க தவறாதீர் :)

8 Responses to “ட்விட்னாங்க!!”

  1. ஆயில்யன் says:

    எங்களை வைச்சு 1ம் காமெடி கீமெடி பண்ணலயே? ! :)

    • சுவாசிகா says:

      என்ன பாஸ் இப்படி தப்பா ஃபீல் பண்ணீட்டிங்க..

      ஆனா ஒண்ணு..அங்கே காமெடியா நடந்தது இங்கே காமெடியா..சே..இடுகையா வரும் :)

      பை தி பை..நீங்களும் இந்த படத்துல..சே..பகுதியில ஹீரோதான் ;)

      சோ கரெக்டா கால்ஷீட்..சே..ட்விட்ட்ரல கடமைRTற்ற வந்துடுங்க.. ஒகே 8)

      அன்புடன்,
      சுவாசிகா

  2. TBCD TBCD says:

    @ksawme அடடா வடை போச்சே ! நானும் இதைப் போல ஒன்றை எழுத திட்டமிட்டுயிருந்தேன்..ஆனால் நான் எழுதியதை மட்டும் :P
    via Twitoaster

  3. Ravi Suga says:

    நாமளும் ஹீரோ ஆகிட்டோம்ல!நாமளும் ஹீரோ ஆகிட்டோம்ல! கலக்கி போடுங்க சாமி!

  4. antonioanbu says:

    தல!!!! நல்ல ஐடியா!!!

    • சுவாசிகா says:

      நன்றி ஆண்டனி தம்பி!!

      அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்து போங்க :)

      அன்புடன்,
      சுவாசிகா

  5. krdineshkumar krdineshkumar says:

    @ksawme ‘அசின்- ஒரு இலக்கணக்குறிப்பு’ ஆஹா தலைப்பே ஆர்வத்தை தூண்டுதே சீக்கிரமா அப்டேட்டுங்க ஆவலுடன் வெய்ட்டிங்…
    via Twitoaster

Leave a Reply

top