அசின் – ஒரு இலக்கண குறிப்பு

இடம்: ட்விட்டர் சபை
கதாப்பாத்திரங்கள்
- @nchokkan – மா மன்னர்
- @ksawme – அமைச்சர்
- @anbudan_bala – ராஜகுரு
- @elavasam – அரசவை வெண்பாளர்
- @srikan2 – காமன் மேன்
nchokkan அமைச்சரே அ-சின் என்றால் பாவம் செய்யாத பெண் என்று அர்த்தமா?
ksawme ஆஹா மாமன்னா நாட்டு முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமான கேள்வி இது
![]()
nchokkan வரலாறு … ச்சே, மொழி மிகவும் முக்கியம் அமைச்சரே
![]()
ராஜகுரு @anbudan_bala சபைக்குள் எண்ட்ரி..
@anbudan_BALA மன்னா ”அழகான சின்னக்குட்டி” மருவி அசின் ஆனது என்று பாலா போன்ற சான்றோர் கூறுவர்:) அப்ப “அ வள்” என்றால் குரைக்காத நாயா? என்ன லாஜிக்கோ
![]()
nchokkan @anbudan_BALA ஐ, இதுவும் நல்லாயிருக்கே, அசின் இலக்கணக் குறிப்பு வரைக-ன்னு ஒரு கேள்வி கேட்டா நாமல்லாம் பாஸ், பாஸ்
![]()
elavasam u have only scratched the surface. இதோ வரேன்
ksawme அதான பார்த்தேன்..பில்டப்பு கொடுக்காம வரமாட்டாரே இவரு..intro சாங் எதுவும் போடாம இருந்தா சரி
elavasam சின்மை – அப்படின்னா சிறுமை. அப்போ அசின் என்றால் மலையாள தேசத்திற்கேயுரிய வளமை கொண்ட பெண் எனப் பொருள்
elavasam சின்மை என்றால் கொச்சை (vulgar) என்ற பொருளும் உண்டு. ஆக கொச்சைத்தனம் இல்லா பூரண அழகு / sophisticated Beauty = அசின்
elavasam அவ்வளவு ஏன்யா. அந்தப் பெயரை ஆங்கிலத்தில் எழுதிப் பார்க்கலாமா? ASIN
elavasam ASIN – as in beautiful, as in amazing, as in unbelievable, as in breathtaking, as in joyous, as in interesting, as in impressive
![]()
elavasam அதுவும் பிடிக்கலையா? பொதுவா சங்கீதம் sa ni என வரும். ஆனால் இவள் அழகைப் பார்த்து அது நிலை குலைந்து as in எனத் தலைகீழாய் நிற்குமய்யா!!
nchokkan @elavasam ஐயா, நீர் மேதை, நீர் மேதை, நாங்களெல்லாம் பேதைகள் – அசின் உங்களுக்குதான், ச்சே, அவார்ட் உங்களுக்குதான்! @anbudan_BALA
ksawme @nchokkan இப்படி அமைச்சரை கலந்தாலோசிக்காமல் பரிசை அறிவிக்கலாமா..கணக்கு உதைக்கும்ல
@elavasam @anbudan_BALA
nchokkan @ksawme அடடே, மறந்துட்டேன் போல, மன்னித்துவிடும் அமைச்சரே
![]()
ksawme @nchokkan but மன்னர் @elavasamக்கு பரிசுகொடுத்தது சரியே ராஜகுரு இன்னும் நிறைய அவரிடமிருந்து கற்றுகொள்ளவேண்டும்;) @anbudan_bala
nchokkan @ksawme யோவ், இப்படியெல்லாம் சொல்லி எனக்கும் ராஜகுருவுக்கும் சண்டை மூட்டிவிடப்பார்க்கறீரா? அது எப்பவும் நடக்காது
@anbudan_BALA
ksawme @nchokkan எனக்கு நானே >> பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
<< ஏய் யாருப்பா அங்க அடுத்த டாபிக் எடுத்து விடுப்பா…
காமன் மேன் @srikan2 லேட்டா எண்ட்ரி
srikan2 @elavasam @nchokkan அசின் என்றால் பண்டைய கிரேக்க மொழியில் “குதிரை மூஞ்சி” என்று பொருள்.
srikan2 யானின்னா பசுமூஞ்சி, தேவயானின்னா பஞ்சரான பசுமூஞ்சி (My cruelty is ?boundless
![]()
ksawme அடடா..போட்டி முடிஞ்சுபோச்சே..பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
srikan2 அடடா…பரிசு போச்சே…அமைச்சரே..ஆறுதல் பரிசு உண்டா
![]()
ksawme சாரி காமென் மேன்..நான் ஆறுதலா பேசறதே பெரிசு..சென்று வாருங்கள்
elavasam அமைச்சரே..பரிசு எங்கே??
ksawme என்னது பரிசா..FREEயா விடு.. FREEயா விடு.. FREEயா விடு மாமே….
![]()
elavasam
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ksawme சே..மனுஷன் நவரசத்தில பின்றாரே..அவர்
ஆகறதுகுள்ள நாம எஸ்ஸாயிடுவோம்..ஹலோ..நான் இப்போ போறேன்..நெக்ஸ்ட் மீட் பண்றேன்..வரட்டா
![]()
டிஸ்கி(ஹே..நானும் இத யூஸ் பண்ணியாச்சு..என்ன ஒரு அல்ப சந்தோஷம்)
இது ஒரு ஜாலிக்காக, மக்கள் நலனுக்காக எழுதப்பட்ட இடுகை
சம்பந்தபட்டவர்கள் என் வீட்டிற்கு ஆட்டோ அனுப்பாமல் பேசி / ட்விட்டி / கமெண்டி தீர்த்து கொள்ளும்படி உதறலுடன்..சே..அன்புடன் கேட்டுகொள்கிறேன்
![]()
(என்னங்க…எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? வேறொன்னுமில்ல..நமக்கு சரண்டர் டையலாக் அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்கும் ஒண்ணுதான்
)


விவிசி, ட்விட்டர்ல விட்டத இங்கே படிச்சிட்டோம்ல…சூப்பர். உங்கள் சேவை எப்போதும் தேவை…
ஹிஹிஹி..நன்றி நண்பா
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இது ஒரு ஜாலிக்காக, மக்கள் நலனுக்காக எழுதப்பட்ட இடுகை..வீட்டுக்கு ஆட்டோ வராதவரை தொடரும்
அன்புடன்,
சுவாசிகா
நல்லா இருக்குது… அடிக்கடி சபை கூடினா நல்லா இருக்கும்!!!
நன்றி செந்தில்
//அடிக்கடி சபை கூடினா நல்லா இருக்கும்!!!//
கண்டிப்பா
அன்புடன்,
சுவாசிகா
ஆவ்….:-) i like it
நன்றி ‘டொன்’ லீ
Good to know that you like it
அன்புடன்,
சுவாசிகா
LOL.
)
இப்படியெல்லாம் இலக்கணகுறிப்பு இருந்திருந்தா தமிழ்ல நல்ல மார்க் வாங்கியிருப்பேன்.
)
//இப்படியெல்லாம் இலக்கணகுறிப்பு இருந்திருந்தா தமிழ்ல நல்ல மார்க் வாங்கியிருப்பேன்.//
சேம் ஃபீலிங்
நேரம் கிடைக்கும்போது அடிக்கடி என் வலைவீட்டுக்கு வாங்க..
அன்புடன்,
சுவாசிகா
ட்விட்டர்ல இதை மிஸ் பண்ணிட்டேன்!
சும்மா சொல்ல கூடாதுங்க, கொத்தனார் (@elavasam) மாதிரி இயல்பா எடுத்து விடறதுக்கு இன்னொருத்தன் பொறந்து வரணும்.
//கொத்தனார் (@elavasam) மாதிரி இயல்பா எடுத்து விடறதுக்கு இன்னொருத்தன் பொறந்து வரணும்//
ஆமா டாக்டர்..அவர் பயங்கர ஆல் ரவுண்டர்தான்..அதுல மாற்று கருத்தே இல்லை
இதுல பெனாத்தலையும் @penathal நீங்க சேர்த்துக்கலாம்
அன்புடன்,
சுவாசிகா