ட்விட்னவங்க சந்திப்பு – சனவரி 2010

சாப்பிட..சே...பேச போகும் முன்
முதற்கண் இந்த சந்திப்பை சாத்தியப்படுத்திய நமது டாக்டர் விஜய் சதாசிவம் (@scanman) அவர்களுக்கு என் நன்றிகள்..
இரண்டாம் மற்றும் முடிவுகண், சுவாசிகாவாகிய (@ksawme) நான் வருவேன் எனத் தெரிந்தும் tweetupக்கு தைரியமாக களமிறங்கிய ஐகாரஸ் பிரகாஷ்க்கும் (@icarusprakash), டைரக்டர் செல்வாவிற்க்கும் (@isr_selva) , அருணுக்கும் (@ommachi) என் நன்றிகள்
இந்த சந்திப்பை மிஸ் பண்ணக்கூடாதுன்னு நைட் மொபைல்ல 5:00 am – 6:20 am வரைக்கும் அலாரம் வைச்சு எந்திரிச்சேன்…பின்ன snooze பண்ணி பண்ணி அலாரமையே டென்ஷனாக்கிறவன் நான்..அந்த கடுப்புல அலாரம் அதன் கடமையை செய்ய தவறிட்டா
7:45 amக்கு நம்ம டாக்டர் குறுஞ்செய்தி அனுப்பினார்..வரலாற்று சிறப்புமிக்க அந்த செய்தி இதோ
On my way, by foot to the Chennai Tweetup
![]()
நான் நடந்தால் மறுநாள்தான் வடபழனி போய் சேருவேன் என்ற காரணத்தினால என் Bajaj Pulsar 150CCலேயே சென்றேன்
மணி 8:15 am – வடபழனி நம்ம வீடு வசந்த பவன் வாசலில் டாக்டர் கைப்பேசியில் மணி செக் பண்ணி நிமிர்ந்தால் எதிரில் சினிமா
போல் பைக்கில் நான்!! டாக்டர் சற்று டெரர் ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ‘பரவாயில்லையே..கரெக்டா டைம்முக்கு வந்துட்டிங்களே’ என்றார்..ஹிஹி என்று சிரித்தேன் (பின்ன..பந்திக்கு முந்துன்னு நம்ம பெரியவங்க சும்மாவா சொன்னாங்க
)
மணி சுமார் 8:20 am – வேட்டைக்காரன் மற்றும் ஐயா கலைஞரின் காப்பீட்டு திட்டம் பற்றி பேசி நாங்கள் warm up செய்து கொண்டிருக்கும்போது என் தமிழ் ட்விட்டர் மற்றும் வலையுலக குரு ஐகாரஸ் பிரகாஷ் எண்ட்ரி..முதலில் டாக்டரிடம் கை குலுக்கிய அவர் என்னை பார்த்து குழம்பி மற்றும் stun ஆகி நிற்க..நிலைமையை சகஜமாக்க நாந்தான் சுவாமி என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்..அவருக்கு தெரியவில்லையென்றால் நாந்தான் ksawme, நாந்தான் சுவாசிகான்னு மேலும் டெரர்
காட்டலாம்னு பிளான்..ஆனால் பிரகாஷ் சுதாரித்ததால் பிழைத்தார்!!
மணி சுமார் 8:25 am – பிரகாஷ் பேசிக்கொண்டே தன் கேமிராவை ரெடி பண்ணிக்கொண்டிருக்கும் போது நம்ம டைரக்டர் ஆர்ப்பாட்டமில்லாமல் சிரித்த முகத்தோடு எண்ட்ரி..அறிமுக படலம் முடிந்தவுடன் வேறு யார் வரணும்னு பிரகாஷ் கேக்க அருண் வரணும்னு சொன்னார் டாக்டர்..பேச்சு தொடர்ந்தது…
மணி சுமார் 8:30 am – பிரகாஷ் கேமராவை பிடுங்கி சே வாங்கி டைரக்டர் போட்டோ எடுக்க ரெடியாக..நாங்க போஸ் கொடுக்க ரெடியாக, சினிமா ஹீரோ போல் கரெக்ட் டைமிங்கல எங்க பின்னாடி வந்து போஸ் கொடுத்தார் அருண்

வாங்க சாப்பிட..சே..பேச போலாம்னு சொன்னவுடன் எடுத்த படம்
கரெக்ட் டைமிங்கல வந்து ஜாயின் ஆன அருண்!!
சில போட்டோக்கள் எடுத்த பின் ஏ/சி டைனிங் ஹாலை நோக்கி படையெடுத்தோம்!!
முக்கிய அறிவிப்பு – இங்கு இருந்து மணி குறிப்புகள் வராது..ஏன்னா நாங்க இனிமே நேரம் காலம் தெரியாமல் சாப்பிட..சே..பேச போறோம்
அருணும் செல்வாவும் ஒரு பக்கத்தில் அமர..நானும் டாக்டரும் பிரகாஷை சுவற்றின் ஒரம் தள்ளி இன்னொரு பக்கத்தை ஆக்கிரமித்தோம்…பிரகாஷ் மனதிற்குள் கண்டிப்பாக ‘What to do..I have been cornered’ன்னு புலம்பியிருப்பார்
சுமார் 2 மணி நேரமாவது டேரா போடற எங்க பிளான் தெரியாமல் நாங்க உட்கார்ந்த உடனே ஆர்டர் எடுக்க வந்தார் ஒருவர்..முந்திரிக்கொட்டை மாதிரி இட்லி வடை சாப்பிடுறீங்களான்னு கேட்டார்..டைரக்டர் உடனே தலையாட்ட..பிரகாஷ் இட்லி ஒகே..வடை வேணாம்னு strictஆக முன் மொழிய..நாங்கள் அனைவரும் வழிமொழிந்தோம்
இட்லி வந்தது..டைரக்டர் சாப்பிடும்முன் சியர்ஸ் சொல்லனுமான்னு கேட்டார்..நான் ஒரு இட்லியை ஏற்கனவே காலி செய்த்தை தெரியாமல்
சூடாக இட்லி சாப்பிட்டபின் டாக்டரும் பிரகாஷும் எடுத்து கொடுக்க வெளுத்த கட்ட ஆரம்பித்தார் அருண்..இந்த சந்திப்பின் ஆட்ட நாயகன் அவரே
நல்ல சுவாரசியமான பேச்சு…சரியான இடத்தில் டாக்டரும் பிரகாஷும் கேள்வி கேட்டு அரட்டை சூப்பராக take off ஆகியது..

அருணின் சுடான சுவையான பேச்சு..
இந்த நேரத்தில் திரும்ப ஆர்டர் எடுக்கும் ஆள் வர, டைரக்டர் தோசை சாப்பிடலாமா எனக் கேட்க, பிரகாஷ் பொங்கல் என முன்மொழிய, நாங்க எல்லோரும் திரும்ப வழிமொழிய, 5 பொங்கல் ordered..

அருணின் சீற்றம்...டைரக்டர் தலைகுனிவு
அட சும்மாங்க
சூடான பொங்கலுடன் தொடர்ந்து அருணின் பேச்சு..சும்மா சொல்லக்கூடாது பொங்கல் சூப்பர்..அருணின் பேச்சும்தான்..பேசிய விஷயங்களை வெளியே சொன்னால் அவரை நிறைய பேர் தட்டிக் கொடுத்து பாராட்டுவார்கள் என்று கூறியதால் அவர் சொன்ன விஷயங்கள் எங்கள் நான்கு பேர் மனதில் மட்டும் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படுகிறது…

அருண் அடித்து ஆடிக் கொண்டிருக்க அதை ஆர்வமாக கேட்டுக் கொண்டிருக்கும் பிரகாஷ் & விஜய்..
அவர் சொன்னதில சிலது மட்டும் இங்கே
- ஐஐடியில் படிப்பவர்கள் எல்லோரும் ஜீனியஸ் இல்லை..அதில் படிக்காதவர்கள் எல்லோரும் சாமானியர்கள் இல்லை..அட..எங்க அப்பாவிடமும், மனைவியிடமும் இதை கண்டிப்பாக சொல்ல வேண்டும்
- ஐஐடி படித்தவர்கள் சிலர் படித்த பின் சம்பந்தமில்லாத துறையில் தங்களின் careerஐ அமைப்பது மிகப் பெரிய துரோகம் என்றார்..உண்மை

அருணின் (நியாயமான) சீற்றம்..அமைதியாக நான்..அடுத்து என்ன ஆர்டர் பண்னலாம் என்று மெனு கார்டை பார்க்கும் டாக்டர்
பேச்சினோடே சீனியர் பாலா வராதது எங்க எல்லோருக்கும் குறையாக பட்டது..I mean, we all missed him there in the tweetup..
பிரகாஷ் தானும், பாலாவும் இந்த மாதிரி சந்திப்பு, வலையுலகம் எல்லாவற்றிலும் ஆக்டிவாக ஒரு ஆட்டம் ஆடி முடித்து விட்டதால் இப்பொழுது இது போன்ற சந்திப்புகளை குறைத்து விட்டதாக சொன்னார்..மேலும் கடந்த காலத்தில் வலையுலக politics பற்றி பேசி வருத்தப்பட்டார்..இப்பொழுது நிலைமை தேவலாம் என்றும் தனக்கும் இந்த சந்திப்பு ஒரு ரீ எண்ட்ரி என்றார்..
சீனியர் மற்றும் மத்த வலையுலக, ட்விட்டர் நண்பர்கள் இது போன்ற சந்திப்பில்(of course, நேரமும் காலமும் ஒத்து வந்தால்) கலந்துக் கொள்ள வேண்டும் என்பது என் அவா..after all வலைபதிவர்களும், ட்விட்டர்களும் சந்தித்து கொள்ளும் வாய்ப்பு மிகவும் குறைவு…நேரில் சந்தித்து பேசும் அனுபவம் எத்தனை முறை ட்விட்டினாலும், வலைபதிவில் பதிந்தாலும் கிடைக்காது..அதே சமயம் சீனியர் போன்ற மூத்த வலைபதிவர்கள் saturation point அடைந்துவிட்டதையும் புரிந்து கொள்ள முடிகிறது..
திரும்ப ஆர்டர் எடுக்கும் ஆள் வர..டைரக்டர் காபி எனக் கேட்க..நாங்கள் எல்லோரும் சரி எனத் தலையாட்ட, ஆறுதல் பரிசு கிடைத்த சந்தோஷம் டைரக்டருக்கு
காபியும் அருணின் பேச்சும் தொடர்ந்தது..டைரக்டர் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்..
காபியை குடித்து முடிக்கும் முன்னரே பில்லை வைத்தார் சர்வர்..பாவம் பய புள்ள..இன்னும் 3 ரவுண்ட் ஹாட்டும் (அட காபிங்க) 1 ரவுண்ட் கோல்டும் (அட ஜுஸ்ங்க) எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தை தெரியாமல்
பில்லை டாக்டரிடம் கொடுக்குமாறு நாங்கள் அனைவரும் கைக்காட்டி எங்கள் ஒற்றுமையை நிலை நாட்டினோம்

எங்கள் டேரா பிளான் தெரியாமல் பில்லை கொடுத்த சர்வரை பார்த்து அபியும்..சே..டாக்டரும் நானும்
அருணின் பேச்சு தொடர..ஜூஸ் குடிக்கலாமான்னு டைரக்டர் கேட்க, பிரகாஷ் காபி என்று முன் மொழிய, நாங்கள் எல்லோரும் வழி மொழிய..டைரக்டர் டெபாஸிட் (திரும்ப) காலி…
இரண்டாம் காபியும் முடிந்தது..ஆனால் அருணின் பேச்சு தொடர்ந்தது…ஐஐடி, NRIக்களின் புலம்பல்கள் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்…பில் வர இந்த முறை பிரகாஷ் pay பண்ண முந்திக் கொண்டார்..

அருண் in his top form..கேமராவை பிரகாஷ் திரும்ப வாங்கிட்டாரே என்ற வருத்தத்தில் டைரக்டர்
டைரக்டரை நாங்கள் இவர் ஓளி ஓவியரோ என சந்தேகம் வரும்படி வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்
நானும் சர்வரை கூப்பிட்டு ஒரு குரூப் போட்டோ எடுக்க சொன்னேன்..எங்கள் மேல் ஹோட்டல் காரர்கள் கொண்ட கடுப்பின் அளவு இந்த போட்டோவில் தெள்ளத் தெளிவாக தெரிந்தது

ஒட்டல் சர்வர் எடுத்த போட்டோ..எங்க மேல இருந்த கோவத்தில் எங்க எல்லாரையும் இருட்டடிப்பு செய்துவிட்டார்
அருண் சிறப்பாக ஆடி..சே..பேசி முடித்தார்..அவரை பாராட்டும் வகையிலும், இம்புட்டு நேரம் பொறுமை காத்த சர்வருக்காகவும் இன்னொரு ரவுண்ட் காபி குடிக்க எல்லாரோலும் ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது..
ஆனா பாருங்க ஆர்டர் பண்ண ஆள் தேடினா கிடைக்கவில்லை..ஒரே ஒருத்தர்(முதலில் ஆர்டர் எடுத்தவர்) தென்பட்டார்..கூப்பிட்டால் கண்டுக்கவேயில்லை…அருண் பாய்ந்து சென்று அவரை கையோடு கூட்டி வந்து ஆர்டர் எடுக்க செய்தார்
இதற்கான பில்லை டைரக்டர் கட்டினார் என்று நினைக்கிறேன்…
டைரக்டர் தன் சொந்த அனுபவத்தை சொல்லி சில specialist டாக்டர்களே சரியாக diagnose பண்ணுவதில்லை என்ற குற்றசாட்டை முன்வைக்க, எங்களில் சிலர் அதை ஆமோதிக்க ஆரம்பிக்க, ஆர்பாட்டமில்லாமல் அமைதியாக அடித்து ஆட ஆரம்பித்தார் டாக்டர்…இந்த இடைவேளையில் பிரகாஷ் ஒரு callஐ attend பண்ண வெளியே சென்று திரும்பி வந்து எதிரில் அமர்ந்து கொண்டார்…

டாக்டர் அமைதியாக அதே சமயம் அழுத்தமாக தன் தரப்பு வாதங்களை எடுத்து வெளுக்கிறார்..சே..வைக்கிறார்..அட ரெண்டும் சரிதானே

டாக்டர் பேச ஆரம்பிக்க, பிரகாஷ் கேட்க, அருண் தூங்க சே கவனிக்க
டாக்டர் பேசியதில் கவனிக்க வைத்தவை
- உடல் உபாதை வந்தால் முதலில் பொது மருத்தவரை பார்க்கவும்..அவர்கள் diagnose செய்து specialistஐ சிபாரிசு செய்தால் மட்டுமே specialistஐ பார்க்கவும்.
- நீங்களே உங்கள் உடல் உபாதைக்கு specialistஐ பார்ப்பதுதான் சரி என்று முடிவு செய்து பார்த்துவிட்டு அதன் பின் பர்ஸ் காலி என்று புலம்பக் கூடாது. ஏனென்றால் தலைவலின்னு Heart Specialistக்கிட்ட போனால் அவர் எதாவது இதயத் கோளாறினால்தான் தலைவலி வருகிறதா என்றுதான் முதலில் பார்ப்பார். அதற்க்கு உண்டான டெஸ்டுகள் எழுதி கொடுப்பார்.
- இன்னும் 5-10 வருடங்களில் obesity நமக்கெல்லாம் பெரிய தலைவலியாகும் ஆகும் வாய்ப்பு அதிகம். அதனால் என்னை போன்ற எடைக்கனம் உடைய்வர்கள் அதைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்..ஹீம்..சொல்றது சுலபம்..அதுபடி நடக்கிறது ரொம்ப கஷ்டம்
- தமிழ்நாட்டில் இன்னும் நிறைய மருத்துவ நிபுணர்கள் தேவை.தற்பொழுது இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே.
- 99% மார்க்கெட்தான் டாக்டரின் feesஐ நிர்ணயக்கிறது
- டாக்டர் புரூனோவிடம் டாக்டர் விஜய் இதற்க்கு முன்னால் எதற்காகவோ வாங்கிக் கட்டிக் கொண்டாரான்னு தெரியல..3-4 தடவையாவது புரூனோகிட்ட இதை சொன்னால் சண்டைக்கு வருவார் என்றார்..புரூனோ அந்த விவரத்தை விஜயிடம் பேசி தீர்த்து கட்ட..சே..கொள்ள சிபாரிசிக்கிறேன்
அப்பா..கொளுத்தி போட்டாச்சு..

டாக்டர் வாக்குமூலத்தை..சே..பேச்சை ஆர்வமாக கேட்கும் பிரகாஷ் & அருண்
டாக்டரும் இப்பொழுது பேசியதை வெளியிட்டால் அருணுக்காவது தட்டி கொடுத்து பாராட்டுவார்கள்.. என்னை பட்டி பார்த்து தீர்த்துவிடுவார்கள் என்று கூறியதால் அவர் கூறிய பல விஷயங்கள் எங்கள் நான்கு பேர் மனதில் மட்டும் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படுகிறது…
டாக்டர் பேசி ஒய்ந்த பின் டைரக்டர் ஜூஸ் குடிக்கலாமான்னு (பரிதாபமாக) கேட்டார்..அவரது கோரிக்கையை 4 பேர் கமிட்டி ஆராயாமல் ஒப்புதல் அளித்தது
5 சாத்துக்குடி ஜூஸ் ordered!!
Bill walletகள் எங்கள் டேபிளில் அடுக்கி கொண்டே போனது…அதில் நாங்க வைத்த டிப்ஸை கூட எடுக்க யாரும் வரவில்லை..அந்த அளவிற்கு நாங்கள் தூள் (டெரர்) கிளப்பிக் கொண்டிருந்தோம்
நாங்கள் ஒட்டல்காரர்களை டார்ச்சர் செய்த்தை பற்றி டைரக்டர் விரிவாக எழுதுகிறேன் எனக் கூறியதால் நான் அந்த சாகசத்தை இங்கே கவர் பண்ணல!!

ரெண்டு பேரும் தூங்கலிங்க..ராங் டைம்ல காமிராவை கிளிக்கி விட்டேன்
பிறகு பிரகாஷ் தன் தொழிலை பற்றி பேச ஆரம்பித்தார்…கணிணியியல் படித்து அதற்கு சம்பந்தமே இல்லாத தொழிலில் அவர் ஈடுப்பட்டிருப்பது எனக்கு வியப்பளித்தது..அவரின் தொழில் இதுவரை நான் கேள்விபடாதது..ஆனால் வித்தியாசமானது..சுவாரசியமானது…அதை பற்றி வெளியே சொல்ல முடியாது என்று இவர்(ரும்) சொன்னதால் அவர் கூறிய பல விஷயங்கள் எங்கள் நான்கு பேர் மனதில் மட்டும் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படுகிறது… (Hat Trick!!!
)

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நான் எடுத்த போட்டோ..பை தி வே..டாக்டர் பாடறது கேட்குதா.. சே ..தெரியுதா
ஜூஸ்க்கு பில் வந்தது..அதை அடியேந்தான் கட்டினேன்..அட நம்புங்கப்பா
எங்களின் அரட்டை படு சுவாரிசியமாக போய் கொண்டிருந்தது.. 2:30 மணிக்கு டாக்டருக்கு ரெயில் என்பதால் சுமார் 12:20க்கு அரை மனதோடு சந்திப்பை முடித்து வாசலுக்கு வந்தோம்..
நாங்கள் வெளியே சென்றபின் ஒட்டல்காரர்கள் சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாகவும், ஒரு சிலர் வேண்டுதல் நிறைவேறியதற்காக திருப்பதிக்கு மொட்டை அடிக்க சென்றதாகவும் எனக்கு தகவல் காற்று வாக்கில் வந்தது..பின்ன அந்த அளவிற்கு டெரர்
காட்டியிருக்கோம்ல
ஹோட்டல் வாசலில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது டாக்டரின் மச்சான் வர..அரை மனதாக அனைவரும் விடைப்பெற்றுக் கொண்டோம்.
கிளம்பும் முன் டைரக்டர் சொன்னது
இந்த அளவிற்கு நிறைவான சந்திப்பை ட்விட்டர்ல பேச முடியுமா என்ன?!
உண்மை…Its good to put faces to the voices..Sorry..in this case tweets…
மறக்க முடியாத சந்திப்பு…Hats off & thanks to Dr.விஜய்…

சந்திப்பின் நடுவர்கள்..பின்னே மத்தவங்க performanceஐ 4 மணி நேரம் பேசாம சாப்பிட்டோம்..சே.. கேட்டோம்ல..என்னது தீர்ப்பா..சூப்பர்
நானும் டைரக்டரும் இந்த சந்திப்பில் பேசியது குறைவு..கேட்டதும் அறிந்ததும் நிறைய..டைரக்டரும் இதை ஒத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்…சந்திப்பில் கலந்துக் கொண்ட அருணுக்கும், பிரகாஷிற்கும் நன்றி
இம்புட்டு நேரம் பொறுமையாக படங்களையும், பதிவையும் பார்த்த உங்களுக்கும் நன்றி!!
பின் குறிப்பு
எங்கள் திருமுகங்களை பெரிதாக பார்க்க வேண்டும் என்ற உங்கள் ஆசையும், வீட்டில் frame பண்ண எண்ணும் உங்கள் நல்லெண்ணம் புரிகிறது… :) மனதை திடப்படுத்திக்கொண்டு தயாராகவும்
![]()
இந்த சந்திப்பில் எடுத்த full resolution photos with face & geo tagகோடு பார்க்க, தரவிறக்கி கொள்ள இங்கே கிளிக்கவும்..


அட ட்விட்டர்கள் சந்திப்பா…நல்லா இருக்கே…:-)
ஆமாம் தம்பி…சென்ற ஞாயிற்றுக் கிழமை சென்னை வடபழனி நம்ம வீடு வசந்த பவனில் நடந்தது
We all had a great time…
அன்புடன்,
சுவாசிகா
டுவிட்னவங்க சந்திப்பா, அல்லது முடி கொட்டினவங்க சந்திப்பா ! புதசெவி :
வருகைக்கு நன்றி நண்பா!!
//டுவிட்னவங்க சந்திப்பா, அல்லது முடி கொட்டினவங்க சந்திப்பா ! புதசெவி//
மன்னிக்கவும்..என்ன சொல்றதுன்னு தெரியல
என் எடையை பற்றி நான் கவலைப்பட்டதுண்டு..ஏனென்றால் அதற்கு காரணம் நானே.. ஆனா தலைமுடி கொட்டியதை பற்றி நான் இதுவரை கவலைப்பட்டது இல்லை..
ஆனால் ஏனென்று தெரியவில்லை, நீங்கள் இப்படி கேட்டவுடன் மிகவும் வருத்தமாகிவிட்டது..இதை நான் எதிர்பார்க்கவில்லை என்பதும் கூட..என்ன சொல்வது என்றும் தெரியவில்லை..அதனால்தான் உங்கள் மறுமொழியை வெளியட நேரமாகிவிட்டது..மன்னிக்கவும்
அன்புடன்,
சுவாசிகா
நல்லா சுவாரஸ்யமா இருக்கு மீட்டிங்க் பத்தின ரிப்போர்ட் !
போட்டோஸ்க்கு பிக்காசோல போய் பார்க்குறேன் !
பாஸ் ஒரு போட்டோவுல ரொம்ப பாவமா உக்காந்திருக்கீங்களே ஏன் மெனு சொல்லாம இம்புட்டு நேரமா பேசிக்கிட்டே இருக்காங்களேன்னு தானே?
நன்றி நண்பா!!
//பாஸ் ஒரு போட்டோவுல ரொம்ப பாவமா உக்காந்திருக்கீங்களே ஏன்//
பசி மயக்கத்தில இருந்திருப்பேன்
அன்புடன்,
சுவாசிகா
தொளதொள டி-ஷர்ட் அல்லது கார்கோ பாண்டினுள் மைக் வைத்து ரிகார்ட் செய்ததது போல் புள்ளி விவரங்களுடன் நிறைய எழுதியிருக்கும் சுவாமிக்கு நன்றி.
நேரம் போனது தெரியாமல் அரட்டை அடித்தோம் என்பதே உண்மை. அரட்டை அரங்கில் சில நல்ல கருத்துக்களும் பரிமாறப்பட்டன. ட்விட்டர் அளவுக்கு மொக்கை இல்லை என்பதும் உண்மை.
எனது அழைப்பை ஏற்று சந்திப்பிற்கு வந்த நால்வருக்கும் நன்றி. கேட்டிருந்தால் அடுத்த நான்கு ரவுண்டு ஹாட் மற்றும் ஜில் பானங்களுக்கும் நானே பில் கட்டியிருப்பேன். (நல்ல வேளை யாருக்கும் இது தோன்றவில்லை)
//தொளதொள டி-ஷர்ட் அல்லது கார்கோ பாண்டினுள் மைக் வைத்து ரிகார்ட் செய்ததது போல் புள்ளி விவரங்களுடன் நிறைய எழுதியிருக்கும் சுவாமிக்கு நன்றி.//
நன்றி டாக்டர்!! பேசியவை சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்ததால் மனதில் அப்படியே பதிந்துவிட்டது..அப்புறம் நான் பேசினது கம்மி..இந்த அளவிற்கு கூட எழுதலேனா அப்புறம் அட இவன் பேசவும் இல்ல,பேசினதை கவனிக்கவும் இல்லேன்னு நினைச்சிருவீங்கல்ல
//அரட்டை அரங்கில் சில நல்ல கருத்துக்களும் பரிமாறப்பட்டன//
உண்மை..ஆனால் சில அல்ல பல
அருணும் நீங்களும் பகிர்ந்த பல விஷயங்கள் எனக்கு eye opener..
//எனது அழைப்பை ஏற்று சந்திப்பிற்கு வந்த நால்வருக்கும் நன்றி//
அழைத்ததற்கு நாந்தான் நன்றி சொல்லனும்..அன்னைக்கு உங்களுக்கு train மட்டும் இல்லேன்னா ஒன் டே மாட்ச் ஆடியிருக்கலாம்!!
//கேட்டிருந்தால் அடுத்த நான்கு ரவுண்டு ஹாட் மற்றும் ஜில் பானங்களுக்கும் நானே பில் கட்டியிருப்பேன்.//
அதற்கென்ன..அடுத்த தடவை சந்திக்காமலேயா போயிடுவோம்
ஆனா டைரக்டர் சொன்ன மாதிரி நாம வேற ஹோட்டலை தேடனும்..இனிமே வசந்த பவன்ல நம்மளை விடறது கஷ்டம்தான்
அன்புடன்,
சுவாசிகா
தல . . தலையில முடி இல்லாத தல . . இந்த வருஷம் ஆரம்பமே கலக்கல். வசந்தபவனர்கள் உர்ரென்று இருந்தாலும், நம்ம சந்திப்பு ஜில்லுன்னுதான் இருந்தது. ஆனாலும் பதிவை அநியாயத்துக்கும் தாமதப்படுத்தி முதன் முதல்ல டாவடிச்ச பரவச டென்ஷனை ஏற்படுத்திட்டீங்க.
தொப்பையை பார்த்துக்கோங்க, தலயை பார்க்க முடியாது, அதான் எல்லாம் கொட்டிடுச்சே. நமக்கு இவ்வளவு அறிவு இருந்தா தலையில முடிக்கு இடம் கம்மியாதான இருக்கும். என்னா பேச்சு பேசறாங்கப்பா அருணும், டாக்டரும். அடுத்த மாட்சுல முதல்ல நானும் நீங்களும் மைக்கை புடிச்சிருவோம். வசந்தபவன் வேண்டாம். நம்ம குருப் போட்டோவை, வாசல்லயே மாட்டிவச்சு, உள்ள விட வேண்டாம்னு சர்வர்களுக்கு உத்தரவாம்.
அடுத்தடுத்த வரிகளை டிவிட்டுகளுக்கு ரிசர்வ் பண்ணிட்டு, ஏன்னா அங்கதான ஆரம்பிச்சுது, இத்தோட முடிச்சிக்கறேன்.
நன்றி டைரக்டர்
//இந்த வருஷம் ஆரம்பமே கலக்கல்.//
ஆமாம்..சூப்பர் ஸ்டார்ட்..எனக்கு இந்த சந்திப்பு பயனுள்ள ரீசார்ஜ்
//வசந்தபவனர்கள் உர்ரென்று இருந்தாலும், நம்ம சந்திப்பு ஜில்லுன்னுதான் இருந்தது//
உண்மை..
//ஆனாலும் பதிவை அநியாயத்துக்கும் தாமதப்படுத்தி முதன் முதல்ல டாவடிச்ச பரவச டென்ஷனை ஏற்படுத்திட்டீங்க.//
//தொப்பையை பார்த்துக்கோங்க, தலயை பார்க்க முடியாது, அதான் எல்லாம் கொட்டிடுச்சே. நமக்கு இவ்வளவு அறிவு இருந்தா தலையில முடிக்கு இடம் கம்மியாதான இருக்கும்.//
கரெக்ட்தான் டைரக்டர்..உடம்பை குறைக்கனும்..ஆனா எப்படின்னுதான் தெரியல
//அடுத்த மாட்சுல முதல்ல நானும் நீங்களும் மைக்கை புடிச்சிருவோம்.//
கண்டிப்பா..அடுத்த தடவை நம்ம பேசலேன்னா நம்மளை துரத்திருவாங்க
//வசந்தபவன் வேண்டாம். நம்ம குருப் போட்டோவை, வாசல்லயே மாட்டிவச்சு, உள்ள விட வேண்டாம்னு சர்வர்களுக்கு உத்தரவாம்//
பின்ன..கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டோம்..வசந்த பவன்ர்களின் காண்டு பற்றி கண்டிப்பாக பதிவிடுங்கள்
அன்புடன்,
சுவாசிகா
[...] This post was mentioned on Twitter by Vijay , Swami K. Swami K said: ட்விட்னவங்க சந்திப்பு – சனவரி 2010 | சுவாசிகா http://j.mp/5nVRVs அனைவரும் வருக வருக
@ommachi @icarusprakash @scanman @isr_selva [...]
@ksawme: ட்விட்னவங்க சந்திப்பு – சனவரி 2010 | சுவாசிகா http://ksaw.me/2010/01/06/tweetup-jan-20... << Thanks 4 the write-up. Shd do more such meetups periodically
via Twitoaster
@ommachi @scanman @isr_selva தொண்RTயதற்கும் கமெண்டியதற்கும் சந்திப்பை பதிவாக எழுத காப்பிரைட்ஸ் கொடுத்ததற்கும்
நன்றி!! நன்றி!! நன்றி!!
via Twitoaster
@ksawme ஏங்க தோழரே, இது எப்ப நடந்தது? அடுத்த ட்வீட்-அப் நடந்தால் சொல்லவும். நாங்களும் நல்லா இட்லி சாப்பிடுவோம்.
via Twitoaster
@PriyaRaju இது Dr @scanman அதிரடி பிளானால் நடந்தது…அடுத்த தடவை முன்னாடியே நோட்டீஸ் அனுப்பிறோம்
via Twitoaster
@ksawme @scanman பரவாயில்லை நண்பர்களே. சும்மா உங்கள் உயிரை வாங்கினேன்
அடுத்த முறை சந்திப்போம்.
via Twitoaster
@PriyaRaju ரைட்டு
@scanman
via Twitoaster
@lakshmi நெஜமாவே இப்படித்தான் இவ்ளோதான் நடந்தது
>> ட்விட்னவங்க சந்திப்பு http://ksaw.me/2010/01/06/tweetup-jan-20... @ksawme @scanman @icarusprakash @isr_selva
via Twitoaster
@ommachi <இவ்ளோதான் நடந்தது
> வீட்டுல @Lakshmi ரொம்ப துளைச்சிட்டாங்களா? நாங்க சிங்கம்ல. @ksawme @scanman @icarusprakash
via Twitoaster
@ommachi புரொபஸர் சார்..நீங்க சொன்ன மாதிரியே எழுதிட்டேன்..நீங்க எழுத வேண்டாம்னு சொன்னதை நான் எழுதலை..ஒகே தானே
#பத்தவைத்தல் @lakshmi
via Twitoaster
@ksawme ட்விட்டரிலேயே இப்படி காலை வார்ரீங்க. நேர்ல பார்த்திருந்தால்? நல்ல வேளை, தப்பிச்சேன். @scanman @ommachi @icarusprakash
via Twitoaster
@Lakshmi நேரில் @ksawme அதிகம் பேசவில்லை. பேசவேண்டியதை எல்லாம் உங்கள் ஹீரோ பேசிவிட்டார்.
via Twitoaster
@scanman ஆமாம்
@Lakshmi நேர்ல வந்திருந்தால் அவங்க பேசியிருப்பாங்க @ommachi சைலண்டா இருந்திருப்பார்!! @isr_selva @icarusprakash
via Twitoaster
எல்லாம் சரி போட்டோ-ல இருக்குறவுங்க எல்லாம் யாரு ? profile போட்டோ-க்கும் இங்க இருக்குறவுங்களுக்கும் சம்பந்தமே இல்லையே ?!?!
General spectrum of photos – from worst to best:
Driving License Photo — Candid Camera Photos — Photos taken without preparation (like during our tweetup) — Photos taken during organized functions (weddings etc) — Professionally taken portraits — Social Media profile pictures.
என்ன சொல்ல வரீங்கன்னு புரியல..
அன்புடன்,
சுவாசிகா
Super….
நன்றி விஜய் கணேஷ்!!
அடிக்கடி என் வீட்டுக்கு வந்து போங்க
அன்புடன்,
சுவாசிகா
சாமி, கலக்கல் பதிவு. பதிவு லேட்டா வந்தாலும் விரைவா வருது சிரிப்பு.
//நான் ஒரு இட்லியை ஏற்கனவே காலி செய்த்தை தெரியாமல்//
விவிசி
ரொப்ப நாளைக்கு அப்புறம் ஆர்வத்தை தூண்டிவாறு இருந்தது ஒவ்வொரு வரியும், ரசித்து படித்தேன் ச்சே அனுபவித்தேன்.
நன்றி நண்பா!!
பெரிய பதிவாக போய்விட்டதே என்று எண்ணினேன்..உங்கள் எல்லாருக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி
நிறைய பேசினோம்…நான் நிறைய கற்றுக் கொண்டேன்.. என் வலையுலக குரு பிரகாஷை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியை அளித்தது..
அருண் மற்றும் டைரக்டருக்கும் நன்றிகள்…
அருணின் பேச்சு தேர்ந்த நிபுணரின் பேச்சு..அவர் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்..
டாக்டருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!!
அன்புடன்,
சுவாசிகா
அடேங்கப்பா என்னமா விவரிச்சு எழுதியிருக்கீங்க….
பதிவுக்கு நன்றி
நன்றி பிரகாஷ்
தமிழ்ல உருப்படியா ஏதாவது எழுதியிருந்தேனா அதற்கு காரணம் நீங்கதான். உங்களை பார்த்து inspireஆகிதான் தமிழிலே எழுத ஆரம்பிச்சேன்..
உங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம்..
அடிக்கடி வாங்க..என் வலைவீட்டுக்கும், ட்விட்டப்புக்கும்
அன்புடன்,
சுவாசிகா
நல்ல சந்திப்பு. படங்களை பார்க்கும் போது கண்கூசியது என்பதை தவிர பெரிதாய் குறையொன்றுமில்லை!
) ஒரு வேளை அந்த எஃபெக்ட்டுலதான் டைரக்டர்ஜி பேசாமலேயே இருந்துட்டாரோ? :pp
நன்றி ஜெய்!!
//படங்களை பார்க்கும் போது கண்கூசியது என்பதை தவிர பெரிதாய் குறையொன்றுமில்லை!//
ஹும்..நீங்களுமா
//ஒரு வேளை அந்த எஃபெக்ட்டுலதான் டைரக்டர்ஜி பேசாமலேயே இருந்துட்டாரோ?//
உங்கள் திருமுகத்தை காட்டாமல் எங்களை இந்த காட்டு காட்டுவது என்ன நியாயமோ தெரியல
அன்புடன்,
சுவாசிகா
நல்ல பதிவு. பேசினதை ஒரு வீடியோ எடுத்துப் போட்டிருக்கலாம். குறிப்பா திரு. ஸ்கேன்மேனரும் அறிவியல் பதிவரும் பேசியதை!
நன்றி நண்பரே
பெரிசா எழுதிட்டேனோன்னு கொஞ்சம் யோசித்தேன்..எல்லோருக்கும் பிடித்ததில் சந்தோஷம்..
//பேசினதை ஒரு வீடியோ எடுத்துப் போட்டிருக்கலாம். குறிப்பா திரு. ஸ்கேன்மேனரும் அறிவியல் பதிவரும் பேசியதை!//
சொன்னதை எழுதினாலே தர்ம அடி விழும் என்றார்கள்.. வீடியோ எடுத்திருந்தால் அம்புட்டுதான்
அன்புடன்,
சுவாசிகா
ஆகா, தினத்தந்தி படிச்ச மாதிரில இருக்கு.
)) நல்லா எழுதி இருக்கிறீர்கள். புகைப்படம், மற்றும் அதன் தலைப்புகள் அருமை. பாராட்டுக்கள்.
மிக்க நன்றி அமீர்!!
உங்களையும் இந்த சந்திப்பில் எதிர்பார்த்தேன்..அடுத்த தடவை கண்டிப்பா வாங்க
அன்புடன்,
சுவாசிகா
அட, நிஜமாவே சூப்பரான அலசல், பகிர்வு! நல்ல மெமரி உங்களுக்கு, விரிவா எல்லார் பேச்சையும் கவர் பண்ணியிருக்கீங்க, பாராட்டுக்களும் நன்றியும் உரித்தாகுக!
அநியாயமா இந்த அட்டகாசமான சந்திப்பை மிஸ் பண்ணிட்டேன். இவ்வளவு நீண்ட சந்திப்பு என்று அப்றம் தான் தெரிய வந்தது, இல்ல லேட்டா வந்தாவது ஆஜராயிருப்பேன். There is always a next time, I guess
பொதுவா, இப்பல்லாம் செலக்டிவா தான் சந்திப்புகளுக்குப் போறேன். பிரகாஷ் சொன்னபடி, ஒரு பெரிய ரவுண்ட் ஓடி ஓய்ந்தாகி விட்டது! வரக்கூடாது என்றெல்லாம் எதுவும் கிடையாது….
அன்புடன்
பாலா
மிக்க நன்றி சீனியர்!!
டாக்டர்கிட்ட சொன்ன மாதிரி இந்த அளவிற்கு கூட எழுதலேனா அப்புறம் அட இவன் பேசவும் இல்ல,பேசினதை கவனிக்கவும் இல்லேன்னு நினைச்சிருவாங்கல்ல
நேரம் போனதே தெரியல..டாக்டருக்கு மட்டும் அன்னைக்கு ட்ரெயின் இல்லன்னா கண்டிப்பா அன்னைக்கு ஒன் டே மாட்ச் ஆடியிருப்போம்
கண்டிப்பா அடுத்த தடவை வந்துருங்க சீனியர்
உங்களை சந்திப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்!!
அன்புடன்,
சுவாசிகா
ஒரு இயக்குனர், ஒரு டாக்டர், ஒரு புரொபசர், ஒரு மென்பொருள் வல்லுனர், ஒரு பிசினஸ்மேன் சந்தித்த ஒரு வரலாற்று நிகழ்வு. நான் தான் மிஸ் பண்ணிட்டேன்
நாங்க கூட உங்களை ரொம்பவுமே மிஸ் பண்ணோம்…டாக்டரும் உங்களை பார்த்ததில்லைன்னு ரொம்ப வருத்தப்பட்டார்..
மறக்காம அடுத்த சந்திப்புக்கு வந்துருங்க
அன்புடன்,
சுவாசிகா
பகிர்விற்கு நன்றிகள்.
நன்றி சூர்யா!!
அடிக்கடி என் வலைவீட்டிற்கு வரவும்.
அன்புடன்,
சுவாசிகா
@ksawme வந்த முப்பத்தெட்டாயிரம் ட்விட்டுகளுக்கும் ஒரே நேரத்தில பதிலா
.. எனக்கு யாரையும் கண்டுபிடிக்கமுடியல @ommachi தவிர
via Twitoaster
@yathirigan
என் கண்ணுக்கு @scanman @icarusprakash @isr_selva ல்லாம் புரொபைல் படத்துல இருக்கிற மாதிரிதான் தெரிஞ்சாங்க..
via Twitoaster
Senior meeting polae irukae? Junior yarum varale? Good to see the photos!
நன்றி கார்த்தி!
இதுல சீனியர் ஜீனியர்ல்லாம் இல்லிங்க
For your information, நான் தமிழ் வலையுலகத்துக்கு ரொம்பவே புதுசு
இது 2 நாள்ல டாக்டர் போட்ட அதிரடி பிளான்..அம்புட்டுதான்..
அன்புடன்,
சுவாசிகா