search
top

உன் அழகுதான் எங்கிட்ட வந்துருச்சே?!

உன் அழகுதான் என்கிட்ட வந்துருச்சே!!

அன்று ஞாயிற்று கிழமை. என் 5 வயது மகளை குளிக்க வைக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்க(திணிக்க) பட்டது :( :)

அவளை குளிக்க வைப்பது இமாலய காரியம், பாத்ரூமை சுத்தி 2 கிலோ மீட்டராவது ஓட வேண்டும்..ஒரு இடத்தில் அவளை நிற்க வைப்பது முடியாத காரியம்..விடுவேனா நான்

அவளை ஒரு இடத்தில் நிற்க வைக்க, அவள் கவனத்தை திசை திருப்ப கேட்டேன்..

ஏம் பாப்பா டெய்லி குளிக்கறதாலதான் அழகா இருக்கியோ ?!

ஒடுவதை நிறுத்து விட்டு ஆமாம் என்றாள்..முதல் வெற்றி :)

இந்த வெற்றி ஒரு நிமிடத்திற்கு மட்டுமே தாக்கு பிடிக்கும்…அடுத்த மூவை அவள் எடுப்பதற்கு முன் நான் முன்னெச்சரிக்கையாக..

அப்புறம் ஏன் பாப்பா நான் அழகாக இல்லை..நானும்தான் டெய்லி குளிக்கிறேன் என்று கேட்டத்துக்கு

‘உன் அழகுதான் எங்கிட்ட வந்துருச்சே’

என்று பல்ப் கொடுத்து விட்டு..நான் ஸ்டென்னாக..அவள் எடுத்தாள் ஓட்டம்..

அவளை ஏமாற்ற நினைத்த எனக்கு 10 எக்ஸ்ட்ரா ரவுண்ட் வாக்கிங் & ஜாக்கிங் :(

ஏனோ வடிவேலுவின் “உன்னோட ஸ்டார்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஃபினிஷிங் சரி இல்லையப்பா” டயலாக் நினைவுக்கு வந்து தொலைத்தது :(

என்ன நீங்க இது மாதிரி உங்க குழந்தைக்கிட்ட பல்ப் வாங்கின சம்பவம் ஏதாவது இருக்குமே ;) அட சும்மா சொல்லுங்க :)

Leave a Reply

top